பாடல் #44489
கொல்கத்தாவிலே பாவம் அறியா
🔤 Kolkatthaavilae Paavam Ariyaa
🎙 Bro. ஆல்வின் சந்தோஷ் • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கத்தாவிலே பாவம் அறியா பரன் இயேசு ஏறுகின்றார் ஏற்றுக்கொண்டீர் ஏற்றுக் கொண்டீர் தீங்கன் எனக்காய் பார சிலுவை 1, கள்ளன் மேலுள்ள அன்பினாலே கசப்பான காடியை ஏற்றுக்கொண்டீர் ரத்தம் நீராய் ஓடுகின்றதோ மகன் மேலுள்ள பாசத்திற்காய் ஏற்றுக்கொண்டீர் ஏற்றுக்கொண்டீர் எத்தன் எனக்காய் பாரசிலுவை 2, பாவி மேலுள்ள இரக்கத்தாலே கைகள் கால்கள் ஆணி சுமந்து கொண்டீர் உடல் வாரியால் கிழிகின்றதோ பிள்ளை மேலுள்ள பிரியத்திற்காய் ஏற்றுக்கொண்டீர் ஏற்றுக்கொண்டீர் பாவி எனக்காய் பாரசிலுவை 3, பொய்யன் மேலுள்ள காருண்யத்தாலே முள்முடி கிரீடம் ஏற்றுக்கொண்டீர் கடின பாதை நடக்கின்றீரோ மைந்தன் மேலுள்ள இரட்சிப்பிற்காய் ஏற்றுக்கொண்டீர் ஏற்றுக்கொண்டீர் துரோகி எனக்காய் பாரசிலுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkatthaavilae Paavam Ariyaa Paran Yesu Aerukinraar Aerrukkonteer Aerruk Konteer Theenggan Enakkaay Paara Siluvai 1, Kallan Maelulla Anpinaalae Kasappaana Kaatiyai Aerrukkonteer Rattham Neeraay Otukindratho Makan Maelulla Paasatthirkaay Aerrukkonteer Aerrukkonteer Etthan Enakkaay Paarasiluvai 2, Paavi Maelulla Irakkatthaalae Kaigal Kaalkal Aani Sumanthu Konteer Udal Vaariyaal Kizhikindratho Pillai Maelulla Piriyatthirkaay Aerrukkonteer Aerrukkonteer Paavi Enakkaay Paarasiluvai 3, Poyyan Maelulla Kaarunyatthaalae Mulmuti Kireedam Aerrukkonteer Katina Paathai Natakkinreero Maindhan Maelulla Iratsippirkaay Aerrukkonteer Aerrukkonteer Thuroki Enakkaay Paarasiluvai