பாடல் #44459
அசைக்கப்படுவதில்லை நான்
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை கர்த்தரை என் முன்பாக வைத்துவிட்டேன் நான் அசைக்கப்படுவதில்லை - 2 1. ஜீவனுள்ள தேவனைப் பற்றிக்கொண்டேன் கறைதிரை ஒன்றும் நெருங்காது - 2 இரட்சகரை என்னோடு அணைத்துக்கொண்டேன் சாத்தானின் சேனை என்னை அணுகாது - 2 2. தேவதூதர் சேனைகள் என்னோடு செல்லுகின்ற இடமெல்லாம் சூழ்ந்திடுவார் - 2 பாதங்கள் கல்லின்மேலே இடறாமல் கரங்களில் ஏந்தி என்னை நடத்திடுவார் - 2 3. இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் - 2 வாக்குத்தத்த வசனங்கள் பெற்றுக்கொண்டேன் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் - 2