பாடல் #44455
பயணியின் நண்பனே
🔤 Payaniyin Nanpanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 யூ ஆர் ஒய் எம் பாடல்கள் (URYM Songs)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயணியின் நண்பனே பாதை தெரிந்தவரே என் இலக்கை அறிந்தவரே வழி விளக்காய் வந்தவரே என் தோணி அக்கரை சேருமோ? வழியில் மாளுமோ? திகில்களால் நான் கலங்கி நின்றேன்! என் படகில் நீர் இருக்கும்பொழுது சேதம் ஆகுமோ? என் பாதை மாறுமோ? 1. வழித்துணையாய் வருவேன் என்று சொன்னவர் ஏறாளம் வாக்கை நம்பி இடறி விழுந்த தவனைகள் தாராளம் - 2 வழித்துணையாய் என்னோடு வழிமுழுதும் வருவீரா? தொடங்கிய என் பயணத்தை பூர்த்தி செய்து தருவீரா? (2nd time தருவீர்) 2. பெரும் அலைகள் படகை சூழ்ந்து சேதப்படுத்தினாலும் கடும் புயல்கள் எந்தன் விசையை நாசப்படுத்தினாலும் - 2 படகோடு அமிழாமல் விரைவாக வருவீரே நடுவழியில் கைவிடாமல் நிறைவாக்கி தருவீரே - 2 3. வெகுதூர பயணம் என்னை சோர்வாக்கினாலும் சில சமயம் துடுப்பை நான் தவரவிட்டாலும் - 2 வழியெல்லாம் என்மீது விழிவைத்து காப்பீரே துறைமுகத்தை சேரும்வரைக்கும் துணையாக வருவீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payaniyin Nanpanae Paathai Therindhavarae En Ilakkai Arindhavarae Vazhi Vilakkaay Vandhavarae En Thoni Akkarai Saerumo? Vazhiyil Maalumo? Thikilkalaal Naan Kalangki Ninraen! En Patakil Neer Irukkumpozhuthu Saedham Aakumo? En Paathai Maarumo? 1. Vazhitthunaiyaay Varuvaen Enru Sonnavar Aeraalam Vaakkai Nampi Idari Vizhundha Thavanaigal Thaaraalam - 2 Vazhitthunaiyaay Ennotu Vazhimuzhuthum Varuveeraa? Thodangkiya En Payanatthai Poortthi Seythu Tharuveeraa? (2nd time Tharuveer) 2. Perum Alaigal Patakai Soozhnthu Saedhappatutthinaalum Katum Puyalkal Endhan Visaiyai Naasappatutthinaalum - 2 Patakotu Amizhaamal Viraivaaga Varuveerae Natuvazhiyil Kaivitaamal Niraivaakki Tharuveerae - 2 3. Vekuthoora Payanam Ennai Sorvaakkinaalum Sila Samayam Thutuppai Naan Thavaravittaalum - 2 Vazhiyellaam Enmeethu Vizhivaitthu Kaappeerae Thuraimugatthai Saerumvaraikkum Thunaiyaaga Varuveerae - 2