பாடல் #44439
நன்மை செய்யும் நாயகரே
🔤 Nanmai Seyyum Naayakarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மை செய்யும் நாயகரே பார் போற்றும் தூயவரே-2 எனக்காக நிற்பவரே எப்போதும் இருப்பவரே-2 நன்றி என்ற ஓர் வார்த்தை உமக்கது போதுமோ? -2 உம் பாதம் பணிந்தாலும் நன்றி கடன் தீருமோ? -2 விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே-2 கரங்களில் வரைந்தீரே காரியமாய் அழைத்தீரே-2 அழைப்பினை மறப்பேனோ? அறுவடை கொடாமல் மரிப்பேனோ?-2 என் பாவம் நிலுவையிலே என்னைத் தள்ளிடாமலே சுமந்தீர் சிலுவையிலே நிறைந்தீர் மனதினிலே -2 மனிதரன்பு மறந்திடுமே புனிதரன்போ? தொடர்ந்திடுமே -2 நீர் செய்த தியாகங்கள் எழுதுவேன் பல நூறு ஆகமங்கள் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmai Seyyum Naayakarae Paar Porrum Thooyavarae-2 Enakkaaga Nirpavarae Eppothum Iruppavarae-2 Nanri Endra Or Vaartthai Umakkathu Pothumo? -2 Um Paadham Paninthaalum Nanri Katan Theerumo? -2 Vittu Vitaamalae Vittuk Kotaamalae Vizhungga Vizhi Thaetum Kankalil Pataamalae-2 Karanggalil Varaintheerae Kaariyamaay Azhaittheerae-2 Azhaippinai Marappaeno? Aruvatai Kotaamal Marippaeno?-2 En Paavam Niluvaiyilae Ennaith Thallitaamalae Sumantheer Siluvaiyilae Niraintheer Manathinilae -2 Manidharanpu Maranthitumae Punidharanpo? Thodarnthitumae -2 Neer Seytha Thiyaaganggal Ezhuthuvaen Pala Nooru Aagamanggal -2