பாடல் #44414
புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்
🔤 Puttham Puthu Varudam Puthumaigal Seyvaar
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார் நித்தம் நிதம் வாழ்வில் காருண்யம் சொரிவார் (2) இம்மானுவேலர் எபிநேச கர்த்தர் இம்மட்டும் காத்து நம்மோடிருப்பார் - 2 1. தேவைகள் யாவும் நிறைவாக சந்திப்பார் பாரங்கள் சுமைகள் கடனெல்லாம் தீர்த்திடுவார் நடைகள் வழுவாமல் உறுதியாய் தாங்கிடுவார் விண்ணப்ப ஜெபங்களுக்கு பதில் தந்து தேற்றிடுவார் 2 2. நோய்கள் நீக்கி புது பெலன் ஈந்திடுவார் உற்சாகத்தோடு உழைத்திட செய்திடுவார் அயராது தூங்காது நிதம் என்னை ஏந்திடுவார் கண்மணி போல் என்னை கருத்தாக காத்திடுவார் 3. ஒவ்வொரு நாளும் புது வழி திறந்திடுவார் ஒயாமல் துதித்து மகிழ்ந்திட செய்திடுவார் புஷ்டியும் பசுமையும் குறையாமல் நடத்திடுவார் நன்மையும் கிருபையும் தொடர்ந்திட செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puttham Puthu Varudam Puthumaigal Seyvaar Nittham Nidham Vaazhvil Kaarunyam Sorivaar (2) Immaanuvaelar Epinaesa Kartthar Immattum Kaatthu Nammotiruppaar - 2 1. Thaevaigal Yaavum Niraivaaga Santhippaar Paaranggal Sumaigal Katanellaam Theertthituvaar Nataigal Vazhuvaamal Uruthiyaay Thaangkituvaar Vinnappa Jebanggalukku Pathil Thanthu Thaerrituvaar 2 2. Noykal Neekki Puthu Pelan Eenthituvaar Ursaagatthotu Uzhaitthida Seythituvaar Ayaraathu Thoongkaathu Nidham Ennai Aenthituvaar Kanmani Pol Ennai Karutthaaga Kaatthituvaar 3. Ovvoru Naalum Puthu Vazhi Thiranthituvaar Oyaamal Thuthitthu Makizhnthida Seythituvaar Pushtiyum Pasumaiyum Kuraiyaamal Natatthituvaar Nanmaiyum Kirupaiyum Thodarnthida Seythituvaar