பாடல் #44402
உலகத்திலே வாழும் மனிதனே
🔤 Ulakatthilae Vaazhum Manidhanae
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்திலே வாழும் மனிதனே உனக்கு பிரதான இலக்கு ஒன்றுண்டு (2) பரலோகம் செல்லணும் பரிசுத்தரை பார்க்கணும் பாடிப்பாடி மகிழணும் பரவசத்தால் நிரம்பணும் (2) 1. பாவத்திலே உழன்று பரிசுத்தத்தை இழந்து மனம் போன போக்கிலே இஷ்டம் போல் வாழ்ந்து (2) மறுமையினை மறந்து மாற்றான் போல் இருந்து மடிந்து அழிந்து வாழும் மனிதனே (2) - உலக 2. ஒரு தடவை இந்த உடலை விட்டு பிரிவதும் அதன்பின் நியாய தீர்படைவதும் (2) ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் தானே அதை மறந்து அலைந்து திரிகின்றாயே (2) 3. பணம் பொருளை நம்பி அகந்தையால் நிரம்பி அயலானை அசட்டை, அற்பமாக எண்ணி (2) ஆத்துமாவை நஷ்டப்படுத்தி அழியும் மனிதனே நல் வழியை விட்டு விலகி ஓடும் மனிதனே (2) - உலக 4. பாவிகளும் அஞ்ஞானிகளும் மரித்து போவாரே ஆஸ்திகளை மற்றவருக்கு வைத்து போவாரே (2) நிழல் போன்ற வாழ்வினை பிடிக்க பார்த்தாரே மிருகம் போல வாழ்ந்து மடிந்திடுவாரே (2) - உலக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthilae Vaazhum Manidhanae Unakku Pirathaana Ilakku Onruntu (2) Paralogam Sellanum Parisuttharai Paarkkanum Paatippaati Makizhanum Paravasatthaal Nirambanum (2) 1. Paavatthilae Uzhanru Parisutthatthai Izhanthu Manam Pona Pokkilae Ishtam Pol Vaazhnthu (2) Marumaiyinai Maranthu Maarraan Pol Irunthu Matinthu Azhinthu Vaazhum Manidhanae (2) - Ulaka 2. Oru Thatavai Indha Udalai Vittu Pirivathum Adhanpin Niyaaya Theerpataivathum (2) Ovvoru Manidhanukkum Nicchayam Thaanae Athai Maranthu Alainthu Thirikinraayae (2) 3. Panam Porulai Nampi Aganthaiyaal Nirampi Ayalaanai Asattai, Arpamaaga Enni (2) Aatthumaavai Nashtappatutthi Azhiyum Manidhanae Nal Vazhiyai Vittu Vilaki Otum Manidhanae (2) - Ulaka 4. Paavigalum Anjnjaanigalum Maritthu Povaarae Aasthigalai Martravarukku Vaitthu Povaarae (2) Nizhal Pondra Vaazhvinai Pitikka Paartthaarae Mirugam Pola Vaazhnthu Matinthituvaarae (2) - Ulaka