பாடல் #44395
பரிசுத்தரை பாடி பரசவமடைவோம்
🔤 Parisuttharai Paati Parasavamataivom
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரை பாடி பரசவமடைவோம் தூயவரை துதித்து துயரத்தை துறப்போம் (2) உன்னதரை உயர்த்தி உலகத்தை மறப்போம் வல்லவரை வாழ்த்தி வலிமை அடைவோம் (2) அல்லேலூயா ஆமென் பாடிடுவோம் அல்லேலூயா ஆமென் துதித்திடுவோம் அல்லேலூயா ஆமென் உயர்த்திடுவோம் அல்லேலூயா ஆமென் வாழ்த்திடுவோம் (பரிசுத்தரை) 1. தேவர்களில் நிகரே இல்லாதவர் பரிசுத்தத்தில் மகத்துவம் உள்ளவர் துதிகளில் வாசம் செய்பவர் அற்புதங்கள் அவர் செய்கிறார்- அல்லேலூயா 2. மேடுகள் பள்ளங்களை சமமாக்குவார் கோணலானவைகளை நேராக்குவார் (2) வனாந்திரத்தை தண்ணீர் ஊற்றாக்குவார் இல்லாதது உள்ளது போல் அவராலாகும் (2) - அல்லேலூயா 3.சிறியவனை குப்பையினின்று உயர்த்துவார் எளியவனை தாழ்மையில் தூக்குவார் (2) பிரபுக்களோடு உட்கார செய்வார் என்னையும் அதுபோல் உயர்த்திடுவார் (2)- அல்லேலூயா 4. வெண்கல கதவை உடைப்பவர் இரும்பு தாள்பாளை முறிப்பவர் (2) வசனத்தை அனுப்பி குணமாக்குவார் உலகத்தை அழிவுக்கு தப்புவிப்பாரே (2)- அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharai Paati Parasavamataivom Thooyavarai Thuthitthu Thuyaratthai Thurappom (2) Unnatharai Uyartthi Ulakatthai Marappom Vallavarai Vaazhtthi Valimai Ataivom (2) Allaelooyaa Aamen Paatituvom Allaelooyaa Aamen Thuthitthituvom Allaelooyaa Aamen Uyartthituvom Allaelooyaa Aamen Vaazhtthituvom (parisuttharai) 1. Thaevarkalil Nigarae Illaadhavar Parisutthatthil Makatthuvam Ullavar Thuthigalil Vaasam Seypavar Arpudhanggal Avar Seykiraar- Allaelooyaa 2. Maetugal Pallanggalai Samamaakkuvaar Konalaanavaigalai Naeraakkuvaar (2) Vanaanthiratthai Thanneer Oorraakkuvaar Illaadhathu Ullathu Pol Avaraalaakum (2) - Allaelooyaa 3.siriyavanai Kuppaiyininru Uyartthuvaar Eliyavanai Thaazhmaiyil Thookkuvaar (2) Pirapukkalotu Utkaara Seyvaar Ennaiyum Athupol Uyartthituvaar (2)- Allaelooyaa 4. Venkala Kathavai Utaippavar Irumpu Thaalpaalai Murippavar (2) Vasanatthai Anuppi Kunamaakkuvaar Ulakatthai Azhivukku Thappuvippaarae (2)- Allaelooyaa