பாடல் #433
ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும்
🔤 Aathmaakkalukkaay Selavu Pannavum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை தியாகம் செய்வாயா? 1. ஆதாரமின்றி அழிந்து போகும் ஆத்ம மீட்பிழந்தவர்க்காய் ஆத்தும பாரம் கொண்டவனாய் ஆதாயம் செய்வாயா? – ஆத்மா 2. எண்ணற்ற மாணவர் நிலையிழந்து கண்ணற்ற நிலையிலுள்ளார் எண்ணற்ற ஆசிகள் பெற்ற நீயும் எண்ணியே பார்ப்பாயா? – ஆத்மா 3. கோதுமை மணி நிலம் விழுந்து செத்தால் அதிக பலன் தருமே பிறரது பாரத்தை உன் பாரமாய் ஏற்றிட துணிவாயா? – ஆத்மா 4. சாமுவேல், மோசே, நெகேமியா போன்ற தீர்க்கரை அறிவாயா? திறப்பின் வாசலில் நிற்க உள்ளம் திறந்து கொடுப்பாயா? – ஆத்மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathmaakkalukkaay Selavu Pannavum Selavu Pannappatavum Unnai Thiyaagam Seyvaayaa? 1. Aathaaraminri Azhinthu Pokum Aathma Meetpizhandhavarkkaay Aatthuma Paaram Kondavanaay Aathaayam Seyvaayaa? – Aathmaa 2. Ennartra Maanavar Nilaiyizhanthu Kannartra Nilaiyilullaar Ennartra Aasigal Pertra Neeyum Enniyae Paarppaayaa? – Aathmaa 3. Kothumai Mani Nilam Vizhunthu Setthaal Athiga Palan Tharumae Pirarathu Paaratthai Un Paaramaay Aerrida Thunivaayaa? – Aathmaa 4. Saamuvael, Mosae, Nekaemiyaa Pondra Theerkkarai Arivaayaa? Thirappin Vaasalil Nirka Ullam Thiranthu Kotuppaayaa? – Aathmaa