பாடல் #43261
கர்த்தரை உயர்த்திடும்
🔤 Karttharai Uyartthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை உயர்த்திடும் காலம், இது நன்றியால் துதித்திடும் நேரம், தேவ வார்த்தையை நம்பிடும் யாரும், கிருபையைக் கொண்டாடிடுவோம்.-(2) 1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர், தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2) கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர், கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2) ...(கர்த்தரை) 2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர், (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2) இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர், என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2) ...(கர்த்தரை) 3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை, எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2) அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க, ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2) ...(கர்த்தரை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Uyartthitum Kaalam, Ithu Nanriyaal Thuthitthitum Naeram, Thaeva Vaartthaiyai Nampitum Yaarum, Kirupaiyaik Kontaatituvom.-(2) 1) Othukkappatta Ennai Saertthukkonteer, Thallappatta Ennai Anaitthuk Konteer -(2) Kaettathaith Thanthitteer, Aaseervathitthitteer, Kaetka Marandhathaiyum Saertthuk Kotutthitteer -(2) ...(karttharai) 2) Palaveena Naeratthil Sumanthu Konteer, (en) Tholviyin Naeratthil Thol Kotuttheer -(2) Ithuvaraik Kaatthavar, Inimaelum Kaatthituveer, Endra Nicchayatthai Enakku Thantheer -(2) ...(karttharai) 3) Tholvi Illai Enakkuth Thoyvum Illai, Evaraik Kantum Enakku Payamumillai -(2) Azhaittha Aandavar, Ennotu Irukka, Orupothum Asaikkap Patuvathillai -(2) ...(karttharai)