பாடல் #43254
போனாபோகுதுன்னு உயிரோட
🔤 Ponaapokuthunnu Uyiroda
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போனாபோகுதுன்னு உயிரோட என்ன வச்சிருக்காரு எங்க இயேசு வச்சிருக்காரு எங்க இயேசு அந்த மன்னாதி மன்னவரு முன்னால என்னைக்குமே மத்ததெல்லாம் வெறும் தூசு பாடையைத் தொட்டதும்.. பரமன் கை பட்டதும்-2 செத்துப்போன மகன் கெத்தா பொழைச்சான் ஆடையைத் தொட்டவுடன்.. ஆண்டவர் திட்டமுடன் பன்னெண்டு வருஷ பாடு பஞ்சா பறந்திச்சு கானாவூர் வீட்டில கடைசி நேரத்துல கலக்கினாரு எங்க இயேசு கலக்கினாரு எங்க இயேசு இந்த வானாதி வானங்கள உண்டாக்கி வச்சவரு செய்வதெல்லாம் செம மாஸ் கஷ்டப்பட்டு தயங்கின...குஷ்டரோகிகளைஎல்லாம்-2 இஷ்டப்பட்டு தொட்டு சுகம் கொடுத்தவரு முப்பத்தெட்டு வருஷமா.. முடங்கிக் கிடந்தவன எழுப்பி நடக்க வச்சதெல்லாம் அவர் பவரு கல்லறையில் வச்சவன கூப்பிட்டு உயிர்கொடுத்து புல்லரிக்க வச்சவரு இயேசு புல்லரிக்க வச்சவரு இயேசு அந்த நல்லவர வல்லவர நம்பியாரும் கெட்டதில்ல என்னைக்கும் இயேசுதான் Boss (பாஸ்) அடிதடி இல்லாம....ஆரவாரம் பண்ணாம-2 உடனடி சுகத்த கொடுத்து ரசிச்சவரு மறுப்பேதும் சொல்லாம..மனசு சலிக்காம பாவியின் வீட்டிலே போஜனம் புசிச்சவரு எல்லார் மனசிலேயும் இடம் புடிச்சவரு இயேசுதாங்க இங்க டாப்பு-நம்ம இயேசுதாங்க இங்க டாப்பு இந்த மண்ணான மனுஷன பொன்னாக மாத்துற இயேசு நாமம்தான் safe (சேஃபு) சும்மா மத்ததெல்லாம் வெறும் டூப்பு சுத்து போட்ட பிசாசுக்கு... பத்துபோட வச்சவரு-2 பத்திரமா உன்ன பாத்துக்குவாரு சொத்து பத்து அத்தனையும் நீ மட்டும் தான் அவர்க்கு கூட்டிக் கழிச்சுப்பாரு சரிவரும் கணக்கு சொந்தம் கொள்ள வந்தவர முந்திக்கொண்டு சந்திக்கிற கிருபை பெற்றவன்தான் வாசி அந்தக் கிருபை உனக்கிருக்கா யோசி இந்த வழி சத்யம் ஜீவன வல்லமையின் தேவன உள்ளத்துல வச்சு இன்னும் நேசி நல்லா உக்காந்து பைபிள வாசி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponaapokuthunnu Uyiroda Enna Vachsirukkaaru Engga Yesu Vachsirukkaaru Engga Yesu Andha Mannaathi Mannavaru Munnaala Ennaikkumae Matthathellaam Verum Thoosu Paataiyaith Thottathum.. Paraman Kai Pattathum-2 Setthuppona Makan Ketthaa Pozhaichsaan Aataiyaith Thottavudan.. Aandavar Thittamudan Pannentu Varusha Paatu Panjsaa Paranthichsu Kaanaavoor Veettila Kataisi Naeratthula Kalakkinaaru Engga Yesu Kalakkinaaru Engga Yesu Indha Vaanaathi Vaananggala Untaakki Vacchavaru Seyvathellaam Sema Maas Kashtappattu Thayangkina...kushtarokigalaiellaam-2 Ishtappattu Thottu Sugam Kotutthavaru Muppatthettu Varushamaa.. Mudangkik Kidandhavana Ezhuppi Natakka Vacchathellaam Avar Pavaru Kallaraiyil Vacchavana Kooppittu Uyirkotutthu Pullarikka Vacchavaru Yesu Pullarikka Vacchavaru Yesu Andha Nallavara Vallavara Nampiyaarum Kettathilla Ennaikkum Yesuthaan Boss (paas) Atidhati Illaama....aaravaaram Pannaama-2 Udanati Sugattha Kotutthu Rasicchavaru Maruppaethum Sollaama..manasu Salikkaama Paaviyin Veettilae Pojanam Pusicchavaru Ellaar Manasilaeyum Idam Puticchavaru Yesuthaangga Ingga Taappu-namma Yesuthaangga Ingga Taappu Indha Mannaana Manushana Ponnaaga Maatthura Yesu Naamamthaan safe (saehpu) Summaa Matthathellaam Verum Tooppu Sutthu Potta Pisaasukku... Patthupoda Vacchavaru-2 Patthiramaa Unna Paatthukkuvaaru Sotthu Patthu Atthanaiyum Nee Mattum Thaan Avarkku Koottik Kazhichsuppaaru Sarivarum Kanakku Sondham Kolla Vandhavara Munthikkontu Santhikkira Kirupai Pertravanthaan Vaasi Andhak Kirupai Unakkirukkaa Yosi Indha Vazhi Sathyam Jeevana Vallamaiyin Devana Ullatthula Vachsu Innum Naesi Nallaa Ukkaanthu Paipila Vaasi