பாடல் #43239
ஆனந்தமாக அலையலையாக
🔤 Aanandhamaaga Alaiyalaiyaaga
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: GM
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமாக அலையலையாக ஐய்யா உம் சந்நிதியில் நான் அநுதினம் நுழைவேன் அன்பினில் மகிழ்வேன் உம் அருகில் ஒரு மனமாக ஒரு நினைவாக இருப்பேன் உம் அருகினிலே இதைவிட வேறென்ன வேண்டுமோ எனக்கு வாழ்வினிலே ஓவ்வொரு முறையும் விழித்திடும்போது உம் முகம் பார்த்தே விழித்திடவேண்டும் இதுதானே என் வாழ்வில் நான் வேண்டும் பாக்கியம் காலையும் மாலையும் கணக்கில்லாமல் கர்த்தரின் முன்னே காத்திட வேண்டும் மெய்யாக இதுதானே ஐய்யா என் ஆசையும் கண்மணிபோல் எனை காத்திடும் தேவனின் கரமதில் நானும் அடங்கிருப்பேன் என்னையும் ஒரு பொருட்டாக நினைத்திட என்னதான் உமக்கு நான் கொடுத்தேன் வழி தெரியாமல் வாழ்ந்திடும்போது வலக்கரம் நீட்டி வரவழைத்தீரே வந்தேனே உம்முன்னே என் இயேசு ராஜனே உருத்தெரியாமல் சிதைந்திடும்போது உருவகம் கொடுத்து உயிர்ப்பித்தீரே உம் பாதம் அது போதும் எனையாளும் தேவனே இது தெரியாமல் இதுவரை நானும் இருட்டினில் மூழ்கிக் கிடந்தேனே இரக்கமும் உருக்கமும் நிறைந்த தேவனின் கிருபையினால் இன்று பிழைத்தேனே தாயின் கருவினில் தோன்றினமுதலே தாங்கி வந்தீரே ஏந்தி வந்தீரே தள்ளாடும் வயதுவரைக்கும் தயை காட்டும் தகப்பனே நோயும் நொடியும் அணுகிவிடாமல் தீயும் தண்ணீரும் சூழ்ந்துவிடாமல் கன்மலை வெடிப்பில் வைத்தென்னை காக்கும் கனிவான தேவனே யுத்தநாளில் என் தலையை மூடினீர் இத்தனை அன்பா என் மீதில் எத்தனை பெரிய பாக்கியமே-இந்த அடிமைக்கு கிடைத்த சிலாக்கியமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamaaga Alaiyalaiyaaga Aiyyaa Um Sannithiyil Naan Anuthinam Nuzhaivaen Anpinil Makizhvaen Um Arukil Oru Manamaaga Oru Ninaivaaga Iruppaen Um Arukinilae Ithaivida Vaerenna Vaentumo Enakku Vaazhvinilae Ovvoru Muraiyum Vizhitthitumpothu Um Mugam Paartthae Vizhitthidavaentum Ithuthaanae En Vaazhvil Naan Vaentum Paakkiyam Kaalaiyum Maalaiyum Kanakkillaamal Karttharin Munnae Kaatthida Vaentum Meyyaaga Ithuthaanae Aiyyaa En Aasaiyum Kanmanipol Enai Kaatthitum Devanin Karamathil Naanum Adangkiruppaen Ennaiyum Oru Poruttaaga Ninaitthida Ennathaan Umakku Naan Kotutthaen Vazhi Theriyaamal Vaazhnthitumpothu Valakkaram Neetti Varavazhaittheerae Vanthaenae Ummunnae En Yesu Raajanae Uruttheriyaamal Sithainthitumpothu Uruvakam Kotutthu Uyirppittheerae Um Paadham Athu Pothum Enaiyaalum Devanae Ithu Theriyaamal Ithuvarai Naanum Iruttinil Moozhkik Kidanthaenae Irakkamum Urukkamum Niraindha Devanin Kirupaiyinaal Inru Pizhaitthaenae Thaayin Karuvinil Thonrinamudhalae Thaangki Vantheerae Aenthi Vantheerae Thallaatum Vayathuvaraikkum Thayai Kaattum Thakappanae Noyum Notiyum Anukivitaamal Theeyum Thanneerum Soozhnthuvitaamal Kanmalai Vetippil Vaitthennai Kaakkum Kanivaana Devanae Yutthanaalil En Thalaiyai Mootineer Itthanai Anpaa En Meethil Etthanai Periya Paakkiyamae-indha Atimaikku Kitaittha Silaakkiyamae