பாடல் #43238
அன்பின் பிதா ஆறுதலின்
🔤 Anpin Pithaa Aarudhalin
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் பிதா ஆறுதலின் பாத்திரம் எங்கள் ஆண்டவரே உங்களுக்கு ஸ்தோத்திரம் எல்லையில்லா ஆனந்தம் நீர் மாத்திரம் உங்கள் அன்பின் முன்னே நாங்களும் எம்மாத்திரம் சுவாசமுள்ள யாவும் உம்மைத் துதிக்கும் உம்மைச் சொல்லும்போது உள்ளம் துள்ளிக் குதிக்கும் இஸ்ரவேலருக்குள்ளும் நான் இது போன்ற விசுவாசத்தைக் கண்டதில்லை என்று சொன்ன தேவனே எங்கள் அன்பும்கூட அப்படித்தான் தேவனே-(2) யோசனையில் பெரிய என் தந்தையே (2) இன்று என்னையும் பெலப்படுத்தும் தந்தையே கண்மணிபோல் காக்கும் எங்கள் கர்த்தரே (2) பாவக் கட்டுகளைப் போக்கும் பரிசுத்தரே (2) இதுவரை நடத்தின எபினேசரும் என்னை இனியும் நடத்திச் செல்வார் உண்மையே அவர் சொல்லிடும் வழி நடந்தால் நன்மையே (2) வழியும் சத்தியமுமான ஜீவனே (2) என்றும் ஆதியும் அந்தமுமான தேவனே தேவைகளைத் தெரிந்த என் தந்தையே (2) என்றும் உம்மை மட்டும் நினைக்கும் என் சிந்தையே (2) வருத்தமும் வேதனையும் விலகிடச் செய்வார் எங்கள் இளைப்பாறுதலின் தேவன் இயேசுவே இனி என்ன குறை வந்திடும் என் வாழ்விலே (2) மரணத்தை மரணத்தால் ஜெயித்தீர் (2) மறுபடி மகிமையாய் உயிர்த்தீர் இன்றுவரை என்னுடனே இருப்பீர் (2) நான் சென்றவுடன் உம்முடனே அணைப்பீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Pithaa Aarudhalin Paatthiram Enggal Aandavarae Unggalukku Sthotthiram Ellaiyillaa Aanandham Neer Maatthiram Unggal Anpin Munnae Naanggalum Emmaatthiram Suvaasamulla Yaavum Ummaith Thuthikkum Ummaich Sollumpothu Ullam Thullik Kuthikkum Isravaelarukkullum Naan Ithu Pondra Visuvaasatthaik Kandathillai Enru Sonna Devanae Enggal Anpumkooda Appatitthaan Devanae-(2) Yosanaiyil Periya En Thanthaiyae (2) Inru Ennaiyum Pelappatutthum Thanthaiyae Kanmanipol Kaakkum Enggal Karttharae (2) Paavak Kattugalaip Pokkum Parisuttharae (2) Ithuvarai Natatthina Epinaesarum Ennai Iniyum Natatthich Selvaar Unmaiyae Avar Sollitum Vazhi Natanthaal Nanmaiyae (2) Vazhiyum Satthiyamumaana Jeevanae (2) Enrum Aathiyum Andhamumaana Devanae Thaevaigalaith Therindha En Thanthaiyae (2) Enrum Ummai Mattum Ninaikkum En Sinthaiyae (2) Varutthamum Vaedhanaiyum Vilakidach Seyvaar Enggal Ilaippaarudhalin Devan Yesuvae Ini Enna Kurai Vanthitum En Vaazhvilae (2) Maranatthai Maranatthaal Jeyittheer (2) Marubati Makimaiyaay Uyirttheer Inruvarai Ennudanae Iruppeer (2) Naan Sendravudan Ummudanae Anaippeer (2)