பாடல் #43234
அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்
🔤 Avarae En Kanmalai Avarae En Ratsakar
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: F/Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர் அவரே என் கோட்டையும் அவரே என் எல்லாமுமே தூயாதி தூயவர் துதிகளுக்கே பாத்திரர் ஆராதனை நாயகர் ஆட்கொண்ட தேவனே தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமல்லோ ராஜாதி ராஜன் ரட்சிப்பின் தேவன் அவர் நாமம் பெரிதல்லோ தாயின் கருவில் தோன்றின முதலே தாங்கி வந்தவர் ஏந்தி வந்தவர் உலகம் தோன்றிடும் முதலே என்னை தெரிந்து கொண்டவர் அறிந்து கொண்டவர் எனக்காக பூமிக்கு வந்தீர் ஐயா எனக்காகவே மரித்தீர்-2 வானாதி வானம் வணங்கிப் பணிந்திடும் பரிசுத்தர் நீரல்லோ பரமேறிச் சென்ற பார் போற்றும் தேவன் பரலோகம் உமதல்லோ பாதம் கல்லில் இடறாமல் என்னை பாதுகாக்கும் ஒரு தெய்வம் நோயும் நொடியும் அணுகாமல் என்னை காவல் செய்யும் குலதெய்வம் எனக்காக மீண்டும் வருவீர் என்னை மறக்காமல் அழைத்துச்செல்வீர்-2 பரிசுத்த தீபம் பரலோகம் செல்ல பலி பீடம் நாமல்லோ மரித்தோரை எழுப்பி மறுரூபம் கொடுக்கும் பரிகாரி அவரல்லோ நேற்றும் இன்றும் என்றும் மாறா தேற்றும் அவரது வலது கரத்தினில் வேற்றுமையின் நிழல் இல்லாத தேவ பாதம் போதும் என்கிறேன் எனக்காக யாவையும் செய்தீர் எல்லாம் எனக்காக செய்து முடித்தீர்-2 சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர் நாமம் அடைக்கலம் ஆராதனைகள் அலங்கார துதிகள் அவர்க்கென்றும் சமர்ப்பனம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avarae En Kanmalai Avarae En Ratsakar Avarae En Kottaiyum Avarae En Ellaamumae Thooyaathi Thooyavar Thuthigalukkae Paatthirar Aaraadhanai Naayakar Aatkonda Devanae Thaevaathi Devan Thinamthorum Thangkum Thaevaalayam Naamallo Raajaathi Raajan Ratsippin Devan Avar Naamam Peridhallo Thaayin Karuvil Thonrina Mudhalae Thaangki Vandhavar Aenthi Vandhavar Ulakam Thonritum Mudhalae Ennai Therinthu Kondavar Arinthu Kondavar Enakkaaga Poomikku Vantheer Aiyaa Enakkaagavae Marittheer-2 Vaanaathi Vaanam Vanangkip Paninthitum Parisutthar Neerallo Paramaerich Sendra Paar Porrum Devan Paralogam Umathallo Paadham Kallil Idaraamal Ennai Paathukaakkum Oru Theyvam Noyum Notiyum Anukaamal Ennai Kaaval Seyyum Kulatheyvam Enakkaaga Meentum Varuveer Ennai Marakkaamal Azhaitthuchselveer-2 Parisuttha Theebam Paralogam Sella Pali Peedam Naamallo Maritthorai Ezhuppi Maruroobam Kotukkum Parikaari Avarallo Naerrum Inrum Enrum Maaraa Thaerrum Avarathu Valathu Karatthinil Vaerrumaiyin Nizhal Illaadha Thaeva Paadham Pothum Enkiraen Enakkaaga Yaavaiyum Seytheer Ellaam Enakkaaga Seythu Mutittheer-2 Singkaasanatthil Veerrirukkum Devan Avar Naamam Ataikkalam Aaraadhanaigal Alangkaara Thuthigal Avarkkenrum Samarppanam