பாடல் #43230
சின்ன பிள்ளை பாடிடும் பாடல்
🔤 Sinna Pillai Paatitum Paadal
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன பிள்ளை பாடிடும் பாடல் கேட்கும் இயேசு இராஜனே உம்மை தினமும் ஜெபித்திடும் எண்ணம் வேண்டும் எந்தன் தேவனே பூத்துக் குலுங்கும் மலரெல்லாம் என் தேவன் சிரிக்கும் சிரிப்புதானய்யா என் வார்த்தை உதிரும் போதெல்லாம் என் மன்னன் போட்ட பிச்சைதானய்யா அன்னை தந்தை எங்கள் இரு கண்கள் என்று நாங்கள் எந்த நாளும் வாழ வேண்டும் இயேசு இராஜனே ஒளி மின்னுகின்ற உந்தன் பாதை செல்லுகின்ற நாங்கள் உந்தன் மந்தை ஆட்டுக்குட்டி தானே நல்ல மேய்ப்பனே பேசும் மொழி ஒன்று அது உண்மை என்று கொண்டு (2) அல்லேலுயா பாடுகின்ற இந்த நாவிலே ஒரு கள்ளம் கபடம் இல்லை என்றும் எங்கள் வாழ்விலே நல்ல பிள்ளை என்று நீர் சொல்ல வேண்டும் இன்று நேர் பாதை காட்ட வேண்டுமய்யா பரம தேவனே உம் சொந்தமாக வாழ்ந்திருந்து எந்த காலமும் மகிழ்ந்து உந்தன் நாமம் உயர்த்த வேண்டும் வரங்கள் தாருமே வேத வசனம் இன்று எங்கள் இருதயத்தில் வந்து (2) கால்களுக்கு தீபமாக மாற வேண்டுமே நல்ல கனி கொடுக்கும் மரங்களாக வளர வேண்டுமே சிலுவை சுமந்த தோளில் பெரும் வலி எடுக்கும் நாளில் கூட மறையும் முன்பு மன்னிப்பையும் வழங்கிப் பார்த்ததேன் அன்று பாவம் செய்த பாவிகளின் குறையைத் தீர்த்ததேன் சீடர் பன்னிரெண்டு அந்த நாளில் உமக்கு உண்டு (2) இந்த நாளில் நாங்கள் உந்தன் சீடர் ஆகிறோம் எங்கள் தேவன் மகிமை எங்கும் பரப்ப தூது போகிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Pillai Paatitum Paadal Kaetkum Yesu Iraajanae Ummai Thinamum Jepitthitum Ennam Vaentum Endhan Devanae Pootthuk Kulungkum Malarellaam En Devan Sirikkum Siripputhaanayyaa En Vaartthai Uthirum Pothellaam En Mannan Potta Pichsaithaanayyaa Annai Thanthai Enggal Iru Kankal Enru Naanggal Endha Naalum Vaazha Vaentum Yesu Iraajanae Oli Minnukindra Undhan Paathai Sellukindra Naanggal Undhan Manthai Aattukkutti Thaanae Nalla Maeyppanae Paesum Mozhi Onru Athu Unmai Enru Kontu (2) Allaeluyaa Paatukindra Indha Naavilae Oru Kallam Kapatam Illai Enrum Enggal Vaazhvilae Nalla Pillai Enru Neer Solla Vaentum Inru Naer Paathai Kaatta Vaentumayyaa Parama Devanae Um Sondhamaaga Vaazhnthirunthu Endha Kaalamum Makizhnthu Undhan Naamam Uyarttha Vaentum Varanggal Thaarumae Vaedha Vasanam Inru Enggal Irudhayatthil Vanthu (2) Kaalkalukku Theebamaaga Maara Vaentumae Nalla Kani Kotukkum Maranggalaaga Valara Vaentumae Siluvai Sumandha Tholil Perum Vali Etukkum Naalil Kooda Maraiyum Munpu Mannippaiyum Vazhangkip Paartthathaen Anru Paavam Seytha Paavigalin Kuraiyaith Theertthathaen Seedar Pannirentu Andha Naalil Umakku Untu (2) Indha Naalil Naanggal Undhan Seedar Aakirom Enggal Devan Makimai Engkum Parappa Thoothu Pokirom