பாடல் #43229
தேவ சத்தம் கேட்கும் வரைக்கும்
🔤 Thaeva Sattham Kaetkum Varaikkum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ சத்தம் கேட்கும் வரைக்கும் நான் காத்திருக்கிறேன் தேவ உத்தரவு வரும் வரைக்கும் எதிர் பார்த்திருக்கிறேன் என் சுயமாய் ஒன்றும் செய்யத்தெரியாது எனக்கெந்த ஞானமும் கிடையாது-2 பரத்திலிருந்து வரும் வரத்துக்காகவும் தேவ கரத்திலிருந்து வரும் சுகத்துக்காகவும் காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன் இடைவிடாமல் ஜெபிக்கும் புது பெலத்தை தாரும் ஐயா இரவில் விழித்து துதிக்கும் துதி ஆடை வேண்டுமய்யா-2 கனவில் கூட வந்து அருகில் நின்று கொண்டு சொப்பனம் தர வேண்டுமே சொப்பனம் தாரும் ஐயா-தேவ சொப்பனம் தாரும் ஐயா என் சித்தம் நிறைவேற முடியாது எனக்கெந்த தகுதியும் கிடையாது-2 வெறுமையான என்னை நிரப்பி நடத்தவும் உமது யோசனையைக் கேட்டு நடக்கவும்; காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன் உருகி உணர்ந்து ஜெபிக்கும் நல்ல உணர்வைத் தாருமைய்யா அருகில் நெருங்கிப் பழகும் பரிசுத்தம் வேண்டுமய்யா-2 பரிந்து பேசுகின்ற பரத்தை தொடுகின்ற ஜெபத்தை தரவேண்டுமே ஆவி ஊற்றுமைய்யா ஜெப ஆவி ஊற்றுமைய்யா இந்தக் களிமண் உடலில் ஒன்றும் கிடையாது உம் ஆவி ஊற்றப்பட்டால் உடையாது-2 கருத்தாய் ஜெபிக்கின்ற வார்த்தைக்காகவும் பரிசுத்தாவியின் பெலத்திற்காகவும் காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன் தேவ சத்தம் கேட்கும் வரைக்கும் நான் காத்திருக்கிறேன் தேவ உத்தரவு வரும் வரைக்கும் எதிர் பார்த்திருக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Sattham Kaetkum Varaikkum Naan Kaatthirukkiraen Thaeva Uttharavu Varum Varaikkum Ethir Paartthirukkiraen En Suyamaay Onrum Seyyattheriyaathu Enakkendha Njaanamum Kitaiyaathu-2 Paratthilirunthu Varum Varatthukkaagavum Thaeva Karatthilirunthu Varum Sugatthukkaagavum Kaatthirukkiraen Ethir Paartthirukkiraen Itaivitaamal Jepikkum Puthu Pelatthai Thaarum Aiyaa Iravil Vizhitthu Thuthikkum Thuthi Aatai Vaentumayyaa-2 Kanavil Kooda Vanthu Arukil Ninru Kontu Soppanam Thara Vaentumae Soppanam Thaarum Aiyaa-thaeva Soppanam Thaarum Aiyaa En Sittham Niraivaera Mutiyaathu Enakkendha Thakuthiyum Kitaiyaathu-2 Verumaiyaana Ennai Nirappi Natatthavum Umathu Yosanaiyaik Kaettu Natakkavum; Kaatthirukkiraen Ethir Paartthirukkiraen Uruki Unarnthu Jepikkum Nalla Unarvaith Thaarumaiyyaa Arukil Nerungkip Pazhakum Parisuttham Vaentumayyaa-2 Parinthu Paesukindra Paratthai Thotukindra Jebatthai Tharavaentumae Aavi Oorrumaiyyaa Jeba Aavi Oorrumaiyyaa Indhak Kaliman Udalil Onrum Kitaiyaathu Um Aavi Oortrappattaal Utaiyaathu-2 Karutthaay Jepikkindra Vaartthaikkaagavum Parisutthaaviyin Pelatthirkaagavum Kaatthirukkiraen Ethir Paartthirukkiraen Thaeva Sattham Kaetkum Varaikkum Naan Kaatthirukkiraen Thaeva Uttharavu Varum Varaikkum Ethir Paartthirukkiraen