பாடல் #43226
என் ஆவியும் என் ஆத்துமாவும்
🔤 En Aaviyum En Aatthumaavum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆவியும் என் ஆத்துமாவும் என் சரீரம் என்றும் இயேசுவுக்கு என் மனமும் என் உணர்வும் என் சித்தமெல்லாம் என் தேவனுக்கு என் காலங்கள் அவர் கரத்தில் என் நேரங்கள் அவர் கணக்கில் இணையேதுமில்லாத அன்பு தந்தென்னை மீட்ட என் தெய்வ இயேசுவுக்கு ஒரு நாளும் குறையாமல் நன்றி சொல்வேனே நல்ல தேவாதி தேவனுக்கு இருளையும் ஒளியையும் பிரித்தவர் அந்த காற்றையும் கடலையும் படைத்தவர் இந்த களிமண்ணான என்னை கரத்தில் வைத்துக்கொண்டு அவர்க்கு பிரியமாய் வனைந்தவர் ஒரு குறையும் இல்லாத நிறைவு தந்து என்னை நேர்த்தியாக செய்து முடித்தவர் இனி சோகங்கள் எனக்கில்லை பெரும் பாரங்கள் எனக்கில்லை ஆனந்தமாய் என் அப்பாவின் கரத்தில் ஆயுள் முழுவதும் தப்பாமல் இருப்பேன் விடுதலை தருகிற தேவனே எனக்குள் விருப்பத்தை வைக்கிற ராஜனே என்னைக் குறித்த உந்தனது நினைவு எப்பொழுதும் நன்மைக்கேதுவாய் இருக்கிறதே உம்மைப்பிடித்த நாள் முதலாய் விழித்த எனது கண்கள் உண்மைக்கேதுவாய் நடக்கிறதே இது உம்மாலே உண்டானது உள்ளம் தேனாக இனிக்கின்றது ஆனாலும் என்ன ஒரு உற்சாகம்தானே கானாவூர் கல்யாண கற்சாடி நானே மறுபடி மறுபடி நினைத்தவர் சொந்த மகனைப் போல நெஞ்சில் அணைத்தவர் ஒரு வழியில்லாத என்னை குழியில் பார்த்தெடுத்து விழியில் வைத்து என்னைக் காத்தவர் ஒரு கழுகைப்போல என்னை சுமந்து கொண்டு வந்து செட்டைக்குள்ளாக்கி மறைத்தவர் இது ஆனந்த பாக்கியமே இதை எந்நாளும் பாடிடுவேன் வாழ்ந்தாலும் இவ்வாழ்க்கை உம்மோடுதானே வாழ்க்கையெல்லாம் இனி என் இயேசுதானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aaviyum En Aatthumaavum En Sareeram Enrum Yesuvukku En Manamum En Unarvum En Sitthamellaam En Devanukku En Kaalanggal Avar Karatthil En Naeranggal Avar Kanakkil Inaiyaethumillaadha Anpu Thanthennai Meetta En Theyva Yesuvukku Oru Naalum Kuraiyaamal Nanri Solvaenae Nalla Thaevaathi Devanukku Irulaiyum Oliyaiyum Piritthavar Andha Kaarraiyum Katalaiyum Pataitthavar Indha Kalimannaana Ennai Karatthil Vaitthukkontu Avarkku Piriyamaay Vanaindhavar Oru Kuraiyum Illaadha Niraivu Thanthu Ennai Naertthiyaaga Seythu Mutitthavar Ini Soganggal Enakkillai Perum Paaranggal Enakkillai Aanandhamaay En Appaavin Karatthil Aayul Muzhuvathum Thappaamal Iruppaen Vitudhalai Tharukira Devanae Enakkul Viruppatthai Vaikkira Raajanae Ennaik Kurittha Undhanathu Ninaivu Eppozhuthum Nanmaikkaethuvaay Irukkirathae Ummaippitittha Naal Mudhalaay Vizhittha Enathu Kankal Unmaikkaethuvaay Natakkirathae Ithu Ummaalae Untaanathu Ullam Thaenaaga Inikkindrathu Aanaalum Enna Oru Ursaagamthaanae Kaanaavoor Kalyaana Karsaati Naanae Marubati Marubati Ninaitthavar Sondha Makanaip Pola Nenjsil Anaitthavar Oru Vazhiyillaadha Ennai Kuzhiyil Paartthetutthu Vizhiyil Vaitthu Ennaik Kaatthavar Oru Kazhukaippola Ennai Sumanthu Kontu Vanthu Settaikkullaakki Maraitthavar Ithu Aanandha Paakkiyamae Ithai Ennaalum Paatituvaen Vaazhnthaalum Ivvaazhkkai Ummotuthaanae Vaazhkkaiyellaam Ini En Yesuthaanae