பாடல் #43225
என் கண்மணி என் கண்ணின் மணியாக
🔤 En Kanmani En Kannin Maniyaaga
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கண்மணி என் கண்ணின் மணியாக நீ என் உள்ளம் தேடிடும் உன் கண்ணில் நீரும் ஏன் இனி யார் என்ன சொன்னாலும் இனி எந்தன் பிள்ளையாக நீ வேறென்ன வந்தாலும் என் அன்பில் சிரிப்பாய் இனி மண்ணில் பிறந்து வாழும்போது வாழ்க்கை கதை தெரியாதா வந்து போகும் துன்பம் எல்லாம் ஒரு நாளில் தீராதா பூத்துக் குலுங்கும் பூக்கள் கூட மறு நாளே வாடாதா வாடிப்போகும் வழி இருந்தாலும் புதுப்பூக்கள் பூக்காதா போராடும் நெஞ்சே இளம்பிஞ்சே நீயும் கலங்காதிரு ஏன்இந்த வாழ்க்கை என்று சோகம் கொண்டு திகையாதிரு கல்வாரி காட்சியை கண்முன்னே நிறுத்திடு உன்மீது உறுத்திடும் பாரத்தை மறந்திடு கண்ணமதில் கைகளை வைத்து கலங்கிடும் கண்மணியே கவலை என்ன கறைந்து போகும் கலங்காதே என்னுயிரே வணங்கிடும் கர்த்தர் உன்னை வாழவைப்பேன் எந்நாளும் உயிர்மூச்சு உன்னைக்காக்க உறங்காமல் கண்தேடும் ஓயாமல் வீசும் புயல் காற்றும் உந்தன் நெஞ்சினிலா வாராமல் வந்த பெரும் சோகம் உன்னை உருக்கிடுதா தா உந்தன் வேதனை நான் வாங்கிக்கொள்கிறேன் தாயாகி நான்உனை என் தோளில் சுமக்கிறேன் அன்றியும் என் தீர்மானத்தில் அழைக்கப்பட்ட உந்தனுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்குமென்று தெரியாதா? அந்தப்படியே ஆவியானவர் உந்தனுக்காய் எந்நாளும் வாக்குக்கடங்கா பெருமூச்சோடு வேண்டிக்கொள்வார் புரியாதா? உன்னை முன் குறித்தேன் பின்பு அழைத்தேன் நீதிமானாக்குவேன் என்னோடு இணைத்து மகிமை கொடுத்து தேவ சாயலாக்குவேன் நான் உந்தன் கூடவே இருக்கின்ற போதிலே வேறெந்த ஆயுதம் வாய்க்காதே போகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kanmani En Kannin Maniyaaga Nee En Ullam Thaetitum Un Kannil Neerum Aen Ini Yaar Enna Sonnaalum Ini Endhan Pillaiyaaga Nee Vaerenna Vanthaalum En Anpil Sirippaay Ini Mannil Piranthu Vaazhumpothu Vaazhkkai Kathai Theriyaathaa Vanthu Pokum Thunbam Ellaam Oru Naalil Theeraathaa Pootthuk Kulungkum Pookkal Kooda Maru Naalae Vaataathaa Vaatippokum Vazhi Irunthaalum Puthuppookkal Pookkaathaa Poraatum Nenjsae Ilampinjsae Neeyum Kalangkaathiru Aenindha Vaazhkkai Enru Sogam Kontu Thikaiyaathiru Kalvaari Kaatsiyai Kanmunnae Nirutthitu Unmeethu Urutthitum Paaratthai Maranthitu Kannamathil Kaigalai Vaitthu Kalangkitum Kanmaniyae Kavalai Enna Karainthu Pokum Kalangkaathae Ennuyirae Vanangkitum Kartthar Unnai Vaazhavaippaen Ennaalum Uyirmoochsu Unnaikkaakka Urangkaamal Kanthaetum Oyaamal Veesum Puyal Kaarrum Undhan Nenjsinilaa Vaaraamal Vandha Perum Sogam Unnai Urukkituthaa Thaa Undhan Vaedhanai Naan Vaangkikkolkiraen Thaayaaki Naanunai En Tholil Sumakkiraen Anriyum En Theermaanatthil Azhaikkappatta Undhanukku Sakalamum Nanmaikkaethuvaay Natakkumenru Theriyaathaa? Andhappatiyae Aaviyaanavar Undhanukkaay Ennaalum Vaakkukkatangkaa Perumoochsotu Vaentikkolvaar Puriyaathaa? Unnai Mun Kuritthaen Pinpu Azhaitthaen Neethimaanaakkuvaen Ennotu Inaitthu Makimai Kotutthu Thaeva Saayalaakkuvaen Naan Undhan Koodavae Irukkindra Pothilae Vaerendha Aayudham Vaaykkaathae Pokumae