பாடல் #43224
என் சமூகம் உனக்கு முன்பாய்ச் செல்லும்
🔤 En Samoogam Unakku Munpaaych Sellum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் சமூகம் உனக்கு முன்பாய்ச் செல்லும் நம்பிக்கையோடே கடந்து போ நீ செய்கிறதெல்லாம் வாய்க்கச் செய்வேன் தொடர்ந்து நீயும் போராடு-2 பார்வோன் சேனைகளா-இல்லை பரந்த செங்கடலா-2 பச்சைப்புழுக்களும் வெட்டுக்கிளிகளும் மென்று தின்ற வருடம்-இனி இரட்டிப்பாகவே நன்மை கிடைத்திடும் இனியும் இல்லை வருத்தம்-2 நான் உன்னோடு நடந்திடும்போது ஒரு நன்மையும் குறைவுபடாது வாடும் வயல் வெளியா-இல்லை வறண்ட பூமிகளா? உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உன்னில் பழுது இல்லை-நான் உந்தன் நோய்களை சுமந்து தீர்த்ததால்; உனக்குள் வியாதி இல்லை-2 உன் சுகத்தினை விரும்புகிறேனே அவன் நுகத்தினை முறித்திடுவேனே-2 வியாதியின் கொடுமைகளா-இல்லை வேதனைத் தழும்புகளா? உன்னைக் கெடுத்திடும் உலகம் கொடுத்திடும் ஒன்றும் தேவையில்லை-நான் என்னைக் கொடுத்து உன் உயிரை மீட்டதால் உனக்கு கவலை இல்லை-2 ஒரு நதி போல் உன் சமாதானம் உன் எல்லையில் பாய்ந்திடச்செய்வேன் எரிகிற சூளைகளா-இல்லை எதிரியின் சூழ்ச்சிகளா? சேஷ்டபுத்திரன் பிரியமானவன் விசேஷித்தவன் நீ-நான் பாதை காட்டிட பரிந்து பேசிட தெரிந்து கொண்டவன் நீ என் இதயத்துக்கேற்றவன் நீயே என் ஆடுகளை மேய்ப்பாயே இனியும் கவலைகளா-இல்லை இருளின் கிரியைகளா?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Samoogam Unakku Munpaaych Sellum Nampikkaiyotae Katanthu Po Nee Seykirathellaam Vaaykkach Seyvaen Thodarnthu Neeyum Poraatu-2 Paarvon Saenaigalaa-illai Parandha Senggatalaa-2 Pachsaippuzhukkalum Vettukkiligalum Menru Thindra Varudam-ini Irattippaagavae Nanmai Kitaitthitum Iniyum Illai Varuttham-2 Naan Unnotu Natanthitumpothu Oru Nanmaiyum Kuraivubataathu Vaatum Vayal Veliyaa-illai Varanda Poomigalaa? Ucchandhalai Mudhal Ullangkaal Varai Unnil Pazhuthu Illai-naan Undhan Noykalai Sumanthu Theertthathaal; Unakkul Viyaathi Illai-2 Un Sugatthinai Virumpukiraenae Avan Nugatthinai Muritthituvaenae-2 Viyaathiyin Kotumaigalaa-illai Vaedhanaith Thazhumpugalaa? Unnaik Ketutthitum Ulakam Kotutthitum Onrum Thaevaiyillai-naan Ennaik Kotutthu Un Uyirai Meettathaal Unakku Kavalai Illai-2 Oru Nathi Pol Un Samaathaanam Un Ellaiyil Paaynthidachseyvaen Erikira Soolaigalaa-illai Ethiriyin Soozhchsigalaa? Saeshtaputthiran Piriyamaanavan Visaeshitthavan Nee-naan Paathai Kaattida Parinthu Paesida Therinthu Kondavan Nee En Idhayatthukkaertravan Neeyae En Aatugalai Maeyppaayae Iniyum Kavalaigalaa-illai Irulin Kiriyaigalaa?