பாடல் #43223
என் தாயும் அவரே என் தந்தை அவரே
🔤 En Thaayum Avarae En Thanthai Avarae
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தாயும் அவரே என் தந்தை அவரே, எந்த நொடியினிலும் நான் வாழ்ந்திடும் வாழ்க்கையின் வழிகள் கர்த்தரே என் ஆறுதல் அவரே என் அடைக்கலம் அவரே இந்த உடலதில் இயங்கிடும், உறுப்பதை இயக்கிடும் ஜீவனும் கர்த்தரே நினைத்து நினைத்து மகிழ்ந்திடும் நெஞ்சமெல்லாம் இனித்திடும் அணைத்து அணைத்து காத்திடும் அன்பு தேவனே ஸ்தோத்திரம் ஒளியாக நின்று கொண்டு உலகாளும் விந்தை என்ன எனையாளும்போது மட்டும் எனக்குள்ளே இனிப்பதென்ன.. இதயத்தை நனைப்பதென்ன விண்ணாளும் எங்கள் தெய்வம் மண்ணோக்கி பார்த்ததென்ன கண்ணான உயிர்களுக்கு மூச்சாக நுழைந்ததென்ன முடிவே உம் எல்லை என்ன நான் வந்த நாள் முதல் என்னுள்ளே இருந்தவர் என் ஆவி பிரிந்ததும் தன்னோடு அணைப்பவர் இது போல எங்கள் சொந்தம் இணையாக ஏதும் இல்லை நான்தானே கர்த்தர்க்கென்றும் மாறாத செல்லப்பிள்ளை உம் பார்வை எந்தன்மீது பட்டாலும் பட்டதென்ன என் துக்கம் எங்கோ சென்று ஓடோடி ஒளிந்ததென்ன உண்மையில் நடந்ததென்ன விலையேறப்பெற்ற அன்பில் நான் இன்று திளைப்பதென்ன விலகாத சொந்தம் கண்டு வியப்பாகி நின்றதென்ன விழி நீரில் கரைந்ததென்ன நான் உந்தன் பிள்ளையாய் வாழ்கின்ற போதிலே வேறென்ன வேண்டுமோ ஐயா என் வாழ்விலே எனக்காக ரத்தம் சிந்தி எனை மீட்ட இயேசுவே உமக்காக சித்தம் செய்து வாழ்வேன் என் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaayum Avarae En Thanthai Avarae, Endha Notiyinilum Naan Vaazhnthitum Vaazhkkaiyin Vazhigal Karttharae En Aarudhal Avarae En Ataikkalam Avarae Indha Udalathil Iyangkitum, Uruppathai Iyakkitum Jeevanum Karttharae Ninaitthu Ninaitthu Makizhnthitum Nenjjamellaam Initthitum Anaitthu Anaitthu Kaatthitum Anpu Devanae Sthotthiram Oliyaaga Ninru Kontu Ulakaalum Vinthai Enna Enaiyaalumpothu Mattum Enakkullae Inippathenna.. Idhayatthai Nanaippathenna Vinnaalum Enggal Theyvam Mannokki Paartthathenna Kannaana Uyirkalukku Moochsaaga Nuzhaindhathenna Mutivae Um Ellai Enna Naan Vandha Naal Mudhal Ennullae Irundhavar En Aavi Pirindhathum Thannotu Anaippavar Ithu Pola Enggal Sondham Inaiyaaga Aethum Illai Naanthaanae Karttharkkenrum Maaraadha Sellappillai Um Paarvai Endhanmeethu Pattaalum Pattathenna En Thukkam Engko Senru Ototi Olindhathenna Unmaiyil Natandhathenna Vilaiyaerappertra Anpil Naan Inru Thilaippathenna Vilakaadha Sondham Kantu Viyappaaki Nindrathenna Vizhi Neeril Karaindhathenna Naan Undhan Pillaiyaay Vaazhkindra Pothilae Vaerenna Vaentumo Aiyaa En Vaazhvilae Enakkaaga Rattham Sinthi Enai Meetta Yesuvae Umakkaaga Sittham Seythu Vaazhvaen En Devanae