பாடல் #43217
என்னை இதுவரைக்கும்
🔤 Ennai Ithuvaraikkum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை இதுவரைக்கும் பத்திரமாய் அழைத்து வந்த இயேசுவுக்கு துதிகன மகிமை என்றென்றும் அவருக்கு மேன்மை அவர் ஆதிமுதல் அந்தம் வரை செய்து வரும் கிரியைகளை சொல்லி முடியாது வார்த்தையில் சொல்லி முடியாது அவர் நீதி செய்ய எழும்பும்போது ஒருவருமே அவர்க்கு முன்னால் நிற்க முடியாது ஒருவரும் நிற்க முடியாது என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு நிச்சயம் பெலனுண்டு இயேசுவின் நாமத்தில் பெலனுண்டு அவர் ஆறுதலின் வார்த்தைகளும் அன்பைக் காட்டும் சாட்சிகளும் எண்ணி முடியாது கணக்கினில் எண்ணி முடியாது உயிரோடிருக்கும் நாள் வரைக்கும் அவர் மனதில் இடம்பிடிக்கும் விருப்பத்தைத் தவிர என்ன உண்டு வேறெதும் கேட்டிட ஒரு நொடிப்பொழுதும் விட்டுவிடாமல் வழி தவறி கெட்டுவிடாமல்; காக்கிற தேவனவர் அன்பை எதிர்பார்க்கிற தேவனவர் எந்த தீங்கும் என்னை துக்கப்படுத்தவும் சோதனையில் சிக்கித்தவிக்கவும் என்றுமே விட்டதில்லை அவரை நம்பினோர் கெட்டதில்லை அவர் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து நன்மையை மட்டும் அள்ளிக்கொடுத்து அரவணைக்கிறவர் அன்பாக ஆசீர்வதிக்கிறவர். நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிக அதிகமாய் கிரியைசெய்கிற இயேசுவின் வல்லமை எனக்கது நித்திய வல்லமை அவர் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவும் கற்பனைகளுக்கு கீழ்ப்படியவும் என்னைத்தடை செய்ய எந்த எதிர் வல்லமையும் இல்ல என் சேனைகளின் கர்த்தர் நாமம் தரித்ததினால் இன்று நானும் கர்த்தரையுடையவன் என்றும் நான் கர்த்தருடையவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Ithuvaraikkum Patthiramaay Azhaitthu Vandha Yesuvukku Thuthigana Makimai Enrenrum Avarukku Maenmai Avar Aathimudhal Andham Varai Seythu Varum Kiriyaigalai Solli Mutiyaathu Vaartthaiyil Solli Mutiyaathu Avar Neethi Seyya Ezhumpumpothu Oruvarumae Avarkku Munnaal Nirka Mutiyaathu Oruvarum Nirka Mutiyaathu Ennaip Pelappatutthum Kiristhuvinaal Ellaavarraiyum Seyya Enakku Nicchayam Pelanuntu Yesuvin Naamatthil Pelanuntu Avar Aarudhalin Vaartthaigalum Anpaik Kaattum Saatsigalum Enni Mutiyaathu Kanakkinil Enni Mutiyaathu Uyirotirukkum Naal Varaikkum Avar Manathil Idampitikkum Viruppatthaith Thavira Enna Untu Vaerethum Kaettida Oru Notippozhuthum Vittuvitaamal Vazhi Thavari Kettuvitaamal; Kaakkira Devanavar Anpai Ethirpaarkkira Devanavar Endha Theengkum Ennai Thukkappatutthavum Sodhanaiyil Sikkitthavikkavum Enrumae Vittathillai Avarai Nampinor Kettathillai Avar Nallathu Kettathu Sollikkotutthu Nanmaiyai Mattum Allikkotutthu Aravanaikkiravar Anpaaga Aaseervathikkiravar. Naan Ninaippatharkum Vaentuvatharkum Miga Athigamaay Kiriyaiseykira Yesuvin Vallamai Enakkathu Nitthiya Vallamai Avar Vaartthaigalukku Sevi Kotukkavum Karpanaigalukku Keezhppatiyavum Ennaitthatai Seyya Endha Ethir Vallamaiyum Illa En Saenaigalin Kartthar Naamam Tharitthathinaal Inru Naanum Karttharaiyutaiyavan Enrum Naan Karttharutaiyavan