பாடல் #43213
இச்சையான யாதொன்றையும்
🔤 Ichsaiyaana Yaathonraiyum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.இச்சையான யாதொன்றையும் பார்க்காமல் இருக்கவே
பரிசுத்த கண்களைத் தாருமைய்யா-(தாருமைய்யா-2)
2.கொச்சையான மொழிஒன்றும் பேசாமல் இருக்கவே
தூய்மையான உதடுகளைத் தாருமைய்யா-(தாருமைய்யா-2)
3.தீமையான ஒலிஒன்றும் கேட்காமல் இருக்கவே
தேவைக்காக செவிகளைத் திறவுமய்யா-(திறவுமய்யா-2)
4.நுகர்கின்ற வாசனையும் நினைக்கின்ற யோசனையும்
உம் மகிமைக்காய் இருக்க வேண்டுமய்யா-(வேண்டுமய்யா-2)
5.சடிதியான கிலி ஒன்றும் பிடிக்காமல் இருக்கவே
பலமுள்ள இருதயத்தை தாருமைய்யா-(தாருமைய்யா-2)
6.நொடிப்பொழுதும் உம்மைவிட்டு பிரியாமல் இருக்கவே
நேசமுள்ள நெஞ்சமதைத் தாருமைய்யா-
(தாருமைய்யா-2)
7.எத்தனையோ சூழ்நிலைகள் எதிர்எதிராய் வந்தாலும்
அத்தனைக்கும் விலகிட வேண்டுமய்யா-
(வேண்டுமய்யா-2)
8.சிந்தனையும் நடத்தையும்
எண்ணங்களும் உணர்வுகளும்
தேவபிரியமாய் இருக்க வேண்டுமய்யா- (வேண்டுமய்யா-2)
9.அதிகாலை நேரத்தோடு ஆத்தும பாரத்தோடு
அனுதினமும் ஜெபித்திட வேண்டுமய்யா- (வேண்டுமய்யா-2)
10.ஆவியின் கனிகளும் ஆவியின் வரங்களும்
அதிகதிகமாய் என்னில் நிரப்புமய்யா-(நிரப்புமய்யா-2)
11.உண்மையும் உத்தமுமாய் உம்வழியெல்லாம் நடக்க
கர்த்தருக்குப் பயப்பட வேண்டுமய்யா-(வேண்டுமய்யா-2)
12. சுத்தமுள்ள தேவனே நித்தமும் காப்பவரே
மொத்தத்தில் உம்சாயல் வேண்டுமய்யா- (வேண்டுமய்யா-2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.ichsaiyaana Yaathonraiyum Paarkkaamal Irukkavae
Parisuttha Kankalaith Thaarumaiyyaa-(thaarumaiyyaa-2)
2.kochsaiyaana Mozhionrum Paesaamal Irukkavae
Thooymaiyaana Udhatugalaith Thaarumaiyyaa-(thaarumaiyyaa-2)
3.theemaiyaana Olionrum Kaetkaamal Irukkavae
Thaevaikkaaga Sevigalaith Thiravumayyaa-(thiravumayyaa-2)
4.nugarkindra Vaasanaiyum Ninaikkindra Yosanaiyum
Um Makimaikkaay Irukka Vaentumayyaa-(vaentumayyaa-2)
5.satithiyaana Kili Onrum Pitikkaamal Irukkavae
Palamulla Irudhayatthai Thaarumaiyyaa-(thaarumaiyyaa-2)
6.notippozhuthum Ummaivittu Piriyaamal Irukkavae
Naesamulla Nenjjamathaith Thaarumaiyyaa-
(thaarumaiyyaa-2)
7.etthanaiyo Soozhnilaigal Ethirethiraay Vanthaalum
Atthanaikkum Vilakida Vaentumayyaa-
(vaentumayyaa-2)
8.sindhanaiyum Natatthaiyum
Ennanggalum Unarvugalum
Thaevapiriyamaay Irukka Vaentumayyaa- (vaentumayyaa-2)
9.athikaalai Naeratthotu Aatthuma Paaratthotu
Anuthinamum Jepitthida Vaentumayyaa- (vaentumayyaa-2)
10.aaviyin Kanigalum Aaviyin Varanggalum
Athigathigamaay Ennil Nirappumayyaa-(nirappumayyaa-2)
11.unmaiyum Utthamumaay Umvazhiyellaam Natakka
Karttharukkup Payappata Vaentumayyaa-(vaentumayyaa-2)
12. Sutthamulla Devanae Nitthamum Kaappavarae
Motthatthil Umsaayal Vaentumayyaa- (vaentumayyaa-2)