பாடல் #43211
இன்னும் உறக்கத்தில் சென்றாயோ
🔤 Innum Urakkatthil Senraayo
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னும் உறக்கத்தில் சென்றாயோ அந்த நேரத்தில் என்னை நீ மறந்தாயோ நான் உறங்குவதும் இல்லையே உனக்காய் தூங்குவதும் இல்லையே-2 அதிகாலை நேரத்தில் பரம அதிகாரம் கொடுக்கவே ஆத்தும பாரத்தில் நான் ஆர்வமாய் வருகையில்-2 இன்னும் விழிக்கவில்லை எழுப்ப மனமுமில்லை எந்தன் ஏக்கம் உன்னில் புரியவில்லை-2 உன்னைக் காத்திடும் தேவனை நீ காத்திட வைப்பதேன்-2 தீட்டிய பட்டயம் அது உறையிலே கிடக்குது வழி காட்டிய வேதமும் உள்ளறையிலே இருக்குது-2 உன்னில் ஜெபமுமில்லை உறக்கம் கலையவில்லை என்னை நினைத்திடவும் நேரமில்லை-2 அந்த சிலுவையின் வேதனை என்னை மறுபடி நெருக்குதே-2 காகிதப்பூக்களாய் நீ கசங்கியே போவதேன்; காலத்தில் பாதியை நீ தூங்கியே கழிப்பதேன்-2 இன்னும் உறக்கமென்ன எழும்ப தயக்கமென்ன இப்படி வாழ்கிறதில் அர்த்தமென்ன- நீ படுத்துத் தூங்கவா என்னைக் கொடுத்துத் தாங்கினேன்-2 நித்திரை செய்கையில் அந்த சத்துரு வருகிறான் உன் சத்துவம் குலையவே பெரும் வேதனை தருகிறான்-2 இனியும் வார்த்தையில்லை துளியும் நேரமில்லை எழும்பு என்மகனே எழுந்துவிடு-2 உன் ஒருவனைக் கொண்டுதான் அந்த பகைவனைத் துரத்துவேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innum Urakkatthil Senraayo Andha Naeratthil Ennai Nee Maranthaayo Naan Urangkuvathum Illaiyae Unakkaay Thoongkuvathum Illaiyae-2 Athikaalai Naeratthil Parama Athikaaram Kotukkavae Aatthuma Paaratthil Naan Aarvamaay Varukaiyil-2 Innum Vizhikkavillai Ezhuppa Manamumillai Endhan Aekkam Unnil Puriyavillai-2 Unnaik Kaatthitum Devanai Nee Kaatthida Vaippathaen-2 Theettiya Pattayam Athu Uraiyilae Kidakkuthu Vazhi Kaattiya Vaedhamum Ullaraiyilae Irukkuthu-2 Unnil Jebamumillai Urakkam Kalaiyavillai Ennai Ninaitthidavum Naeramillai-2 Andha Siluvaiyin Vaedhanai Ennai Marubati Nerukkuthae-2 Kaakidhappookkalaay Nee Kasangkiyae Povathaen; Kaalatthil Paathiyai Nee Thoongkiyae Kazhippathaen-2 Innum Urakkamenna Ezhumba Thayakkamenna Ippati Vaazhkirathil Artthamenna- Nee Patutthuth Thoonggavaa Ennaik Kotutthuth Thaangkinaen-2 Nitthirai Seykaiyil Andha Satthuru Varukiraan Un Satthuvam Kulaiyavae Perum Vaedhanai Tharukiraan-2 Iniyum Vaartthaiyillai Thuliyum Naeramillai Ezhumpu Enmakanae Ezhunthuvitu-2 Un Oruvanaik Kontuthaan Andha Pakaivanaith Thuratthuvaen-2