பாடல் #43203
மகனே என் மகனே உலகை வெல்வோம் வா
🔤 Makanae En Makanae Ulakai Velvom Vaa
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகனே என் மகனே உலகை வெல்வோம் வா... மகளே என் மகளே நீயும் பின்னே வா.. உன் வாசல் வழி முன்னே நானும் செல்வேன் வா எந்நாளும் என் ஆசி உன்னைக் காத்திடும் வா கலங்கிடும் இருதயம் இனி இல்லை ஒரு பயம் கவலைகள் நீங்கிட வா ஆறுதல் அளித்திட அடைக்கலம் கொடுத்திட நானும் இருக்கிறேன் வா வாழ்க்கையின் வழி முழுதும் வந்து உனை வாழ்த்திடச் செய்திடவா காத்திடும் கர்த்தர் முன்னே நீயும் உந்தன் பாவத்தை பலியிட வா நன்மையும் கிருபையும் உம்மைத்தொடரும் உன் ஜீவனுள்ள நாட்களில் வா உன்னையும் என்னையும் இணைத்திடும் உறவிது உண்மையைப் புரிந்திட வா பரிசுத்த ஆவியிலே உன்னை இன்று நிரம்பிடச் செய்திட வா பரலோக ராஜ்ஜியத்தில் உனக்கு என்று இடமொன்றை ஒதுக்கினேன் வா. உன் கரம் பிடித்திட என் கரம் நீட்டினேன் நன்றாய் கவனித்து வா இடுக்கத்தின் வழியே உட்பிரவேசிக்க உலகத்தை உதறிட்டு வா என் துணை உனக்கிருக்க உனக்கு இன்னும் பயமென்ன நேராய் வா என் உள்ளங்கைகளிலே உன் பெயரை எழுதி வைத்திட்டேன் வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makanae En Makanae Ulakai Velvom Vaa... Makalae En Makalae Neeyum Pinnae Vaa.. Un Vaasal Vazhi Munnae Naanum Selvaen Vaa Ennaalum En Aasi Unnaik Kaatthitum Vaa Kalangkitum Irudhayam Ini Illai Oru Payam Kavalaigal Neengkida Vaa Aarudhal Alitthida Ataikkalam Kotutthida Naanum Irukkiraen Vaa Vaazhkkaiyin Vazhi Muzhuthum Vanthu Unai Vaazhtthidach Seythidavaa Kaatthitum Kartthar Munnae Neeyum Undhan Paavatthai Paliyida Vaa Nanmaiyum Kirupaiyum Ummaitthodarum Un Jeevanulla Naatkalil Vaa Unnaiyum Ennaiyum Inaitthitum Uravithu Unmaiyaip Purinthida Vaa Parisuttha Aaviyilae Unnai Inru Nirampidach Seythida Vaa Paraloga Raajjiyatthil Unakku Enru Idamonrai Othukkinaen Vaa. Un Karam Pititthida En Karam Neettinaen Nanraay Kavanitthu Vaa Itukkatthin Vazhiyae Utpiravaesikka Ulakatthai Udharittu Vaa En Thunai Unakkirukka Unakku Innum Payamenna Naeraay Vaa En Ullangkaigalilae Un Peyarai Ezhuthi Vaitthittaen Vaa