பாடல் #43202
மண்ணோடு மண்ணாக என்னை எடுத்து
🔤 Mannotu Mannaaga Ennai Etutthu
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணோடு மண்ணாக என்னை எடுத்து அதைக் கையில் குழைத்து ஒரு பொன்னான மனிதனாய் உருவாக்கினார் நல்ல சிங்காரத்தோட்டமாய் ஏதேன் படைத்து அதில் என்னையும் வைத்து அதைப் பாதுகாத்து பண்படுத்து என்று சொல்லினார். அவை எல்லாமே அவர் கரத்தின் கிரியைகள் அவர் சொல்லாலே உண்டான உயிரினங்கள் ஆடும் மயிலும் அந்த பாடும் குயிலும் என்னைச் சுற்றி சுற்றி வட்டமிட்டு மகிழ்ந்திருக்க இளம் காலைப்பனியில் அந்த சோலைக்குளிரில் எந்தன் தேவன் வந்து என்னோடு இசைந்திருக்க எல்லா விருட்சங்களும் வளர்ந்திருக்க நன்றாய் கனி கொடுக்க என்னை பறித்திடு புசித்திடு என்று கூறினார் அதேசமயம் ஒரு கனியிருக்கு அது கெட்டு இருக்கு அதை விட்டு விடு விலகிடு என்று கூறினார் அந்த ஆதாமைப் போல் என்னை வீழ்த்திடவே அந்த சோதோமைப்போல என்னைக் கவிழ்த்திடவே-2 வலு சர்ப்பமும் வந்து வஞ்சனையுடன் ஒரு திட்டமிட்டு கிட்ட வந்து ஆசை காட்ட சர்வ வல்லமை கொண்ட எந்தன் இயேசு நாமத்தில் அதை துரத்த துரத்த அது ஓடிப்போக... காலோடு காலாக அடி எடுத்து அவர் கரம் பிடித்து அவர் சொல்லும்படி செல்லும்படி வழி நடத்தினார் தோளோடு தோளாக என்னை அணைத்து மெல்லத் தட்டிக் கொடுத்து செல்லப் பிள்ளையாக்கி உள்ளமெங்கும் அன்புகூறினார் அவர் சொல்லாமல் ஒரு செயல் செய்ததில்லை அவர் இல்லாமல் எங்கும் என்றும் சென்றதில்லை-2 காலம் கடந்து ஒரு வாசல் அடைந்து அது என்னவென்று ஏங்கிக்கொண்டு எட்டிப்பார்க்க தேவ தூதரின் கரம் என்னை வரவேற்க தேவ மகிமையின் பரலோகம் என்ன சொல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannotu Mannaaga Ennai Etutthu Athaik Kaiyil Kuzhaitthu Oru Ponnaana Manidhanaay Uruvaakkinaar Nalla Singkaaratthottamaay Aethaen Pataitthu Athil Ennaiyum Vaitthu Athaip Paathukaatthu Panpatutthu Enru Sollinaar. Avai Ellaamae Avar Karatthin Kiriyaigal Avar Sollaalae Untaana Uyirinanggal Aatum Mayilum Andha Paatum Kuyilum Ennaich Surri Surri Vattamittu Makizhnthirukka Ilam Kaalaippaniyil Andha Solaikkuliril Endhan Devan Vanthu Ennotu Isainthirukka Ellaa Virutsanggalum Valarnthirukka Nanraay Kani Kotukka Ennai Paritthitu Pusitthitu Enru Koorinaar Athaesamayam Oru Kaniyirukku Athu Kettu Irukku Athai Vittu Vitu Vilakitu Enru Koorinaar Andha Aathaamaip Pol Ennai Veezhtthidavae Andha Sothomaippola Ennaik Kavizhtthidavae-2 Valu Sarppamum Vanthu Vanjjanaiyudan Oru Thittamittu Kitta Vanthu Aasai Kaatta Sarva Vallamai Konda Endhan Yesu Naamatthil Athai Thurattha Thurattha Athu Otippoga... Kaalotu Kaalaaga Ati Etutthu Avar Karam Pititthu Avar Sollumbati Sellumbati Vazhi Natatthinaar Tholotu Tholaaga Ennai Anaitthu Mellath Thattik Kotutthu Sellap Pillaiyaakki Ullamengkum Anpukoorinaar Avar Sollaamal Oru Seyal Seythathillai Avar Illaamal Engkum Enrum Sendrathillai-2 Kaalam Katanthu Oru Vaasal Atainthu Athu Ennavenru Aengkikkontu Ettippaarkka Thaeva Thoodharin Karam Ennai Varavaerka Thaeva Makimaiyin Paralogam Enna Solla