பாடல் #43201
மரணப்படுக்கையில் படுத்திருந்தேன்
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
Scale: Fm
Beat: 4/4
மரணப்படுக்கையில் படுத்திருந்தேன் என்னைத் தொட்டவரே இன்னும் உயிரோடிருக்கிறேன் நான் உயிரோடிருக்கிறேன் ஓடி வந்து உம்மைத் தொட்டதினால் பெரும்பாடு நின்றதே இன்று சுகமாய் இருக்கிறேன் உமது மகளாய் சிரிக்கிறேன் உரத்த சத்தமாய் சத்தமிட்டேன் என்னைக் கண்டவரே இன்று உலகைக் காண்கிறேன் உமது படைப்பைப் பார்க்கிறேன் கைகால் வராமல் கிடத்தப் பட்டேன் என்னை எழுப்பினீரே இன்று எழுந்து நடக்கிறேன் உம் பாதம் விழுந்து கிடக்கிறேன் கல்லரைச் சங்கிலியால் கட்டப்பட்டேன் கட்டவிழ்த்தவரே இன்று புத்தி தெளிந்திருக்கிறேன் புது வஸ்திரம் அணிந்திருக்கிறேன் கொன்னைவாய்ச் செவிடாய் தவித்திருந்தேன் தயை செய்தவரே இன்று பேசித்துதிக்கிறேன் வசனம் கேட்கத் துடிக்கிறேன் அசுத்த ஆவியினால் அவதிப்பட்டேன் என்னை விடுவித்தவரே இன்று ஆராதிக்கிறேன் உமது ஆவியில் நிறைகிறேன் சூம்பின கையோடு சோர்ந்திருந்தேன் என்னை சொஸ்தமாக்கினீர் இன்று கைகளை அசைக்கிறேன் இரு கரங்களைத் தட்டுகிறேன்