பாடல் #43195
நீ விழுந்தது அது நல்லதுக்குத்தான்
🔤 Nee Vizhundhathu Athu Nallathukkutthaan
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ விழுந்தது அது நல்லதுக்குத்தான் நீ எழும்பிடப்போகிறாய் நீ அழுதது அது நல்லதுக்குத்தான் நீ சிரித்திடப்போகிறாய் சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடத்திடும் இயேசு இருக்கையில கலக்கம் என்ன? துயரங்கள் மத்தியில் ஆறுதல் அளித்திடும் தூயவர் இருப்பதால் சோகம் என்ன உன் உபத்திரவம் அது நல்லதுக்குத்தான் தேவ பிரமாணம் கற்றுக்கொள்ள உன் சோதனைகள் அது நல்லதுக்குத்தான் தேவ உதவியைப் பெற்றுக்கொள்ள உன் வருத்தங்கள் அது நல்லதுக்குத்தான் இளைப்பாறுதல் நாடிட உன் தோல்விகள் அது நல்லதுக்குத்தான் இனி வெற்றிப்படி ஏறிட நீ சிறுமைப்பட்டது நல்லதுக்குத்தான் தேவ கண்கள் உன்னை நோக்கிட உன் வறுமைகூட அது நல்லதுக்குத்தான் உன் பெருமைகள் உடைந்திட உன் பெலவீனம் அது நல்லதுக்குத்தான் தேவ கிருபையை நீ ருசிக்க உன் சுகவீனம் அது நல்லதுக்குத்தான் தேவ கிரியைகள் வெளிப்பட உனக்கும் எதிரி உண்டு அது நல்லதுக்குத்தான் நீ ஜெயிப்பதை உணர்ந்திட உன்னை நிந்திப்பதும் அது நல்லதுக்குத்தான் நீ மன்னிப்பையும் வழங்கிட உன் சூழ்நிலை அது நல்லதுக்குத்தான் எந்த நாளிலும் நீ மகிழ உன் குறைவுகள் அது நல்லதுக்குத்தான் தேவ நிறைவுகள் நீ அடைய தேவனின் திட்டத்தில் பாடுகள் இல்லாமல் பரலோகம் என்பது இல்லை இல்லை! இயேசுவின் பிள்ளைகள் இதை உணர்ந்திருந்தால் எதுவும் உனக்கு இங்கு தொல்லை இல்லை!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Vizhundhathu Athu Nallathukkutthaan Nee Ezhumpidappokiraay Nee Azhudhathu Athu Nallathukkutthaan Nee Siritthidappokiraay Sakalamum Nanmaikku Aethuvaay Natatthitum Yesu Irukkaiyila Kalakkam Enna? Thuyaranggal Matthiyil Aarudhal Alitthitum Thooyavar Iruppathaal Sogam Enna Un Ubatthiravam Athu Nallathukkutthaan Thaeva Piramaanam Karrukkolla Un Sodhanaigal Athu Nallathukkutthaan Thaeva Udhaviyaip Perrukkolla Un Varutthanggal Athu Nallathukkutthaan Ilaippaarudhal Naatida Un Tholvigal Athu Nallathukkutthaan Ini Verrippati Aerida Nee Sirumaippattathu Nallathukkutthaan Thaeva Kankal Unnai Nokkida Un Varumaikooda Athu Nallathukkutthaan Un Perumaigal Utainthida Un Pelaveenam Athu Nallathukkutthaan Thaeva Kirupaiyai Nee Rusikka Un Sugaveenam Athu Nallathukkutthaan Thaeva Kiriyaigal Velippata Unakkum Ethiri Untu Athu Nallathukkutthaan Nee Jeyippathai Unarnthida Unnai Ninthippathum Athu Nallathukkutthaan Nee Mannippaiyum Vazhangkida Un Soozhnilai Athu Nallathukkutthaan Endha Naalilum Nee Makizha Un Kuraivugal Athu Nallathukkutthaan Thaeva Niraivugal Nee Ataiya Devanin Thittatthil Paatugal Illaamal Paralogam Enbathu Illai Illai! Yesuvin Pillaigal Ithai Unarnthirunthaal Ethuvum Unakku Ingku Thollai Illai!