பாடல் #43194
நீர் படைத்த சிருஷ்டிகள்
🔤 Neer Pataittha Sirushtigal
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் படைத்த சிருஷ்டிகள் ஒவ்வொன்றும் அழகு உம் வசனத்தின் வார்த்தைகள் எல்லாமே அழகு நீர் இல்லாத ஒரு வாழ்க்கை யார்க்கென்ன அழகு நீர் சொல்லாத ஒரு வார்த்தை இருந்தென்ன அழகு அதிகாலையில் உம்மைத் தேடுகையில் உம் ஆலோசனை அவை ஒவ்வொன்றும் அழகு சில நேரத்தில் நான் தவறுகையில் என் சிந்தனையில் தட்டி திருத்துவது அழகு நீர் எப்போதும் எனக்காக பரிந்துரைத்தல் அழகு நான் இப்போதும் உமக்காக காத்திருத்தல் அழகு மலைபோல எழும்பிடும் எதிர் வல்லமை அதை பனிபோல கரைத்திடும் உம் கிருபை அழகு சூறாவளி என்ன சுழல் காற்றும் தான் என்ன சூழ்நிலையை மாற்றும் உம் பதிவிடைகள் அழகு நீர் எனக்காக செய்கின்ற யுத்தங்கள் அழகு நான் கணக்காக கேட்கும் உம் சத்தங்கள் அழகு உபத்திரவத்தின் ஒரு குகை நடுவினில்-என்னை தெரிந்தெடுத்து மீட்ட உம் இரட்சிப்பு அழகு ஒரு சாட்சியாய் எனை உம்முன்னே நிறுத்தி நான் உமைப்பற்றி சொல்கின்ற சுவிசேஷம் அழகு உம் கற்பனையும் கட்டளையும் கடைபிடிப்பதழகு உம் கரம் பிடித்து காலமெல்லாம் வழி நடப்பதழகு நீர் அழகைய்யா நின் பேர் அழகைய்யா நேர் நிகரில்லா தயை காட்டும் அன்பழகைய்யா எதைச்சொல்வதோ நான் எதை விடுப்பதோ உம் நாமத்தை நினைத்தாலே நினைப்பழகைய்யா நான் உமக்காக சுமக்கின்ற பாரங்கள் அழகு நீர் எனக்காக ஒதுக்கும் உம் நேரங்கள் அழகு நீர் படைத்த சிருஷ்டிகள் ஒவ்வொன்றும் அழகு உம் வசனத்தின் வார்த்தைகள் எல்லாமே அழகு நீர் அழைக்கின்ற மனிதரெல்லாம் பிழைக்கின்றதழகு உமை நினைக்கின்ற யாவரையும் அணைக்கின்றதழகு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Pataittha Sirushtigal Ovvonrum Azhaku Um Vasanatthin Vaartthaigal Ellaamae Azhaku Neer Illaadha Oru Vaazhkkai Yaarkkenna Azhaku Neer Sollaadha Oru Vaartthai Irunthenna Azhaku Athikaalaiyil Ummaith Thaetukaiyil Um Aalosanai Avai Ovvonrum Azhaku Sila Naeratthil Naan Thavarukaiyil En Sindhanaiyil Thatti Thirutthuvathu Azhaku Neer Eppothum Enakkaaga Parinthuraitthal Azhaku Naan Ippothum Umakkaaga Kaatthirutthal Azhaku Malaipola Ezhumpitum Ethir Vallamai Athai Panipola Karaitthitum Um Kirupai Azhaku Sooraavali Enna Suzhal Kaarrum Thaan Enna Soozhnilaiyai Maarrum Um Pathivitaigal Azhaku Neer Enakkaaga Seykindra Yutthanggal Azhaku Naan Kanakkaaga Kaetkum Um Satthanggal Azhaku Ubatthiravatthin Oru Kukai Natuvinil-ennai Therinthetutthu Meetta Um Iratsippu Azhaku Oru Saatsiyaay Enai Ummunnae Nirutthi Naan Umaipparri Solkindra Suvisaesham Azhaku Um Karpanaiyum Kattalaiyum Kataipitippathazhaku Um Karam Pititthu Kaalamellaam Vazhi Natappathazhaku Neer Azhakaiyyaa Nin Paer Azhakaiyyaa Naer Nigarillaa Thayai Kaattum Anbazhakaiyyaa Ethaichsolvatho Naan Ethai Vituppatho Um Naamatthai Ninaitthaalae Ninaippazhakaiyyaa Naan Umakkaaga Sumakkindra Paaranggal Azhaku Neer Enakkaaga Othukkum Um Naeranggal Azhaku Neer Pataittha Sirushtigal Ovvonrum Azhaku Um Vasanatthin Vaartthaigal Ellaamae Azhaku Neer Azhaikkindra Manidharellaam Pizhaikkindrathazhaku Umai Ninaikkindra Yaavaraiyum Anaikkindrathazhaku