பாடல் #43192
நெஞ்சுருக என்னை அணைத்து
🔤 Nenjsuruga Ennai Anaitthu
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சுருக என்னை அணைத்து நெடுந்தூரம் கையைப்பிடித்து தாயைப்போல தூக்கி எடுத்து தந்தையாய் எனக்கு புத்தி சொல்லும் எங்க இயேசவைப் போல யாருமில்ல அவர் உங்களுக்கும் ரொம்ப தூரமில்ல-2 காலைதோறும் என்னை எழுப்பி கற்றுக் கொள்ளக்கவனிக்கச் செய்து கண்ணு காதெல்லாம் திறந்து வச்சு கல்விமானின் நாவைத் தந்த என் ஆலோசனைக் கர்த்தர் இயேசு இருக்க துர் ஆலோசனையெல்லாம் தூரமிருக்கும்-2 வெட்டவெளியில கண்டுபிடித்தென்னை வெட்டியாக விட்டு விடாமல் வெறுமையெல்லாம் நிரப்பி நல்லா என் வேலை செய்யுன்னு அனுப்பினவர் எஜமான்இயேசுவுக்காய் நான் ஓடுறேங்க அவர் ராஜ்யமும் நீதியும் தேடுறேங்க-2 ஓநாய் கூட்டத்து மத்தியில உள்ளே நுழைஞ்சேன் ஒத்தையில வீணாய் நானும் போகக்கூடாதுன்னு தானாய் வந்து தைரியம் கொடுக்கும் இயேசு இருக்கையில பயமுமில்ல நான் எப்பொழுதும் இயேசுவுக்கு பயந்தபுள்ள-2 பரத்துக்கென்னை சொந்தமாக்க பணயம் வச்சாரு தன் உயிரை ஜீவன் எனக்கு தந்ததுமல்லாமல் தயவும் பாராட்டி தகுதிப்படுத்தும் என் இயேசுவுக்காய் எங்கும் போவேனுங்க இன்னும் நீசனும் அற்பனும் ஆவேனுங்க-2 பட்டும் படாம வாழ்ந்திருந்தேன் பாக்குறதெல்லாம் ஆசப்பட்டேன் கேக்குறதெல்லாம் கிடைக்குன்னு கேள்விப்பட்டும் சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினச்ச என் இருதயத்த இயேசப்பா கேட்டாருங்க அவர் பிடிச்சார்னா விட்டுவிட மாட்டாருங்க-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjsuruga Ennai Anaitthu Netunthooram Kaiyaippititthu Thaayaippola Thookki Etutthu Thanthaiyaay Enakku Putthi Sollum Engga Yesavaip Pola Yaarumilla Avar Unggalukkum Romba Thooramilla-2 Kaalaithorum Ennai Ezhuppi Karruk Kollakkavanikkach Seythu Kannu Kaathellaam Thiranthu Vachsu Kalvimaanin Naavaith Thandha En Aalosanaik Kartthar Yesu Irukka Thur Aalosanaiyellaam Thooramirukkum-2 Vettaveliyila Kantupititthennai Vettiyaaga Vittu Vitaamal Verumaiyellaam Nirappi Nallaa En Vaelai Seyyunnu Anuppinavar Ejamaanyesuvukkaay Naan Oturaengga Avar Raajyamum Neethiyum Thaeturaengga-2 Onaay Koottatthu Matthiyila Ullae Nuzhainjsaen Otthaiyila Veenaay Naanum Pogakkootaathunnu Thaanaay Vanthu Thairiyam Kotukkum Yesu Irukkaiyila Payamumilla Naan Eppozhuthum Yesuvukku Payandhapulla-2 Paratthukkennai Sondhamaakka Panayam Vachsaaru Than Uyirai Jeevan Enakku Thandhathumallaamal Thayavum Paaraatti Thakuthippatutthum En Yesuvukkaay Engkum Povaenungga Innum Neesanum Arpanum Aavaenungga-2 Pattum Pataama Vaazhnthirunthaen Paakkurathellaam Aasappattaen Kaekkurathellaam Kitaikkunnu Kaelvippattum Saakkupokku Solli Thappikka Ninaccha En Irudhayattha Yesappaa Kaettaarungga Avar Pitichsaarnaa Vittuvida Maattaarungga-2