பாடல் #43191
நிலையில்லா வாழ்வினில் நிம்மதி தருவது
🔤 Nilaiyillaa Vaazhvinil Nimmathi Tharuvathu
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.நிலையில்லா வாழ்வினில் நிம்மதி தருவது எது? எனக்காய் ஜீவனைத் தந்த என் தேவனை என்றுமே துதிப்பது அது 2. மரண இருளினில் நடந்தாலும் உன்னைத் தைரியப் படுத்துவது எது? என்றுமே என்னோடு வருகின்ற தேவனின் வசனத்தின் வார்த்தைதான் அது 3. எந்தச் சூழ்நிலையிலும் புது மகிழ்ச்சியாய் இருக்கவே கற்றுக்கொடுத்தது எது? குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் எங்கள் கிறிஸ்துவின் பிரியம்தான் அது 4. பெலவீன நேரத்தில் சோர்ந்திடும் வேளையில் உன்னைத் தாங்கிடும் பெலன்தான் எது? கன்மலை வெடிப்பினில் வைத்தென்னைக் காக்கும் என் தேவனின் கரம்தான் அது 5. மாமிச உலகினில் ஆவியின் வாழ்க்கையில் உன்னில் ஜெயிப்பது எது? பாவத்தை கண்டிக்கும் பரிசுத்த ஆவியின் சத்திய வல்லமை அது 6. பாவத்தின் சாபத்தில் வீழ்ந்திட்ட உந்தன் கறைகளைத் துடைத்தது எது? எனக்காய் சிலுவையை சுமந்த என் இயேசுவின் பரிசுத்த இரத்தம்தான் அது 7. அறிவும் புத்தியும் யோசனையும் உனக்கு அள்ளித் தருவது எது? ஆதியும் அந்தமும் ஆன பிதாவுக்கு பயப்படும் பயம்தான் அது 8. உண்மையாய் உன்னை ஆவியின் பாதையில் வளரச்செய்வது எது? ஆண்டவர் சமூகத்தில் அனுதினம் அமர்ந்து ஜெபித்திடும் ஜெபம்தான் அது 9. நீ கெட்டுப்போகாமல் பாது காக்க உன்னைத் தொட்டு தூக்கியது எது? எனக்காய் சொந்த குமாரனைக் கொடுத்த என் தேவனின் அன்புதான் அது 10. மொத்தமாய் உந்தன் அத்தனை நடத்தையும் நன்மையாய் நடப்பிப்பதெது? பரிசுத்தத்தோடு பயபக்தியோடு நம்பிடும் விசுவாசம் அது 11. சகலமும் படைத்த தேவனும் உன்மேல் இரங்கிடச் செய்தது எது? இரக்கமும் உருக்கமும் நிறைந்த என் தேவனின் இணையில்லா கிருபைதான் அது 12. மரணம் பிரித்திடும் வேளையில் மறுபடி தேவனில் இணைப்பது எது? மரணத்தை ஜெயித்த இயேசு கொடுத்த நித்திய ஜீவன்தான் அது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.nilaiyillaa Vaazhvinil Nimmathi Tharuvathu Ethu? Enakkaay Jeevanaith Thandha En Devanai Enrumae Thuthippathu Athu 2. Marana Irulinil Natanthaalum Unnaith Thairiyap Patutthuvathu Ethu? Enrumae Ennotu Varukindra Devanin Vasanatthin Vaartthaithaan Athu 3. Endhach Soozhnilaiyilum Puthu Makizhchsiyaay Irukkavae Karrukkotutthathu Ethu? Kuraivugalellaam Niraivaakkum Enggal Kiristhuvin Piriyamthaan Athu 4. Pelaveena Naeratthil Sornthitum Vaelaiyil Unnaith Thaangkitum Pelanthaan Ethu? Kanmalai Vetippinil Vaitthennaik Kaakkum En Devanin Karamthaan Athu 5. Maamisa Ulakinil Aaviyin Vaazhkkaiyil Unnil Jeyippathu Ethu? Paavatthai Kantikkum Parisuttha Aaviyin Satthiya Vallamai Athu 6. Paavatthin Saabatthil Veezhnthitta Undhan Karaigalaith Thutaitthathu Ethu? Enakkaay Siluvaiyai Sumandha En Yesuvin Parisuttha Ratthamthaan Athu 7. Arivum Putthiyum Yosanaiyum Unakku Allith Tharuvathu Ethu? Aathiyum Andhamum Aana Pithaavukku Payappatum Payamthaan Athu 8. Unmaiyaay Unnai Aaviyin Paathaiyil Valarachseyvathu Ethu? Aandavar Samoogatthil Anuthinam Amarnthu Jepitthitum Jebamthaan Athu 9. Nee Kettuppokaamal Paathu Kaakka Unnaith Thottu Thookkiyathu Ethu? Enakkaay Sondha Kumaaranaik Kotuttha En Devanin Anputhaan Athu 10. Motthamaay Undhan Atthanai Natatthaiyum Nanmaiyaay Natappippathethu? Parisutthatthotu Payapakthiyotu Nampitum Visuvaasam Athu 11. Sakalamum Pataittha Devanum Unmael Irangkidach Seythathu Ethu? Irakkamum Urukkamum Niraindha En Devanin Inaiyillaa Kirupaithaan Athu 12. Maranam Piritthitum Vaelaiyil Marubati Devanil Inaippathu Ethu? Maranatthai Jeyittha Yesu Kotuttha Nitthiya Jeevanthaan Athu