பாடல் #43190
ஒண்ணும் ஒண்ணும் மூணுன்னு
🔤 Onnum Onnum Moonunnu
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒண்ணும் ஒண்ணும் மூணுன்னு சொன்னேன் ஒண்ணு விடாம எதிர்த்து நின்னேன் கண்ணு மண்ணு தெரியாம வாழ்ந்தேன் கண்டு பிடிச்சீங்களே-சும்மா கண்ணாமூச்சு ஆட்டம் போட்டேன் கட்டி பிடிச்சீங்களே விரும்பினபடி குறும்பு செஞ்சேன் திரும்பத் திரும்ப மறுதலிச்சேன்-2 அசுத்தத்துல புரண்டு புரண்டு அச்சத்தில மருண்டு மருண்டு-2 திசைக்கொரு பக்கம் ஓடித்திரிஞ்சேன் விட்டு பிடிச்சீங்களே-என் திமிரெடுத்த நினைப்பையெல்லாம் புட்டு ஒடைச்சீங்களே கண்டபடி கண்ண அலையவிட்டேன் கண்டதையெல்லாம் நம்பித் தொலைச்சேன்-2 உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணி தெண்டமா ஒரு ஜீவனம் பண்ணி-2 இஷ்டத்துக்கும் வாழ்ந்த என்மேல்; இஷ்டப் பட்டீங்க-என் நஷ்டத்தையெல்லாம் ஈடு கட்ட கஷ்டப் பட்டீங்க குத்தம் குறைக்கே முக்கியம்; கொடுத்தேன் மொத்தத்துல என் புத்தியைக் கெடுத்தேன்-2 அத்துமீறிக்கூட ஆசை புடிச்சு உத்தமனாட்டும் நடிச்சு நடிச்சு-2 உதவாக்கறையான எனக்கு உதவி செஞ்சீங்க இந்த ரெண்டுங்கெட்டானையும் கூட தெளிய வச்சீங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onnum Onnum Moonunnu Sonnaen Onnu Vitaama Ethirtthu Ninnaen Kannu Mannu Theriyaama Vaazhnthaen Kantu Pitichseenggalae-summaa Kannaamoochsu Aattam Pottaen Katti Pitichseenggalae Virumpinapati Kurumpu Senjsaen Thirumbath Thirumba Marudhalichsaen-2 Asutthatthula Purantu Purantu Acchatthila Maruntu Maruntu-2 Thisaikkoru Pakkam Otitthirinjsaen Vittu Pitichseenggalae-en Thimiretuttha Ninaippaiyellaam Puttu Otaichseenggalae Kandapati Kanna Alaiyavittaen Kandathaiyellaam Nampith Tholaichsaen-2 Unda Veettukku Rendakam Panni Thendamaa Oru Jeevanam Panni-2 Ishtatthukkum Vaazhndha Enmael; Ishtap Patteengga-en Nashtatthaiyellaam Eetu Katta Kashtap Patteengga Kuttham Kuraikkae Mukkiyam; Kotutthaen Motthatthula En Putthiyaik Ketutthaen-2 Atthumeerikkooda Aasai Putichsu Utthamanaattum Natichsu Natichsu-2 Udhavaakkaraiyaana Enakku Udhavi Senjseengga Indha Rentungkettaanaiyum Kooda Theliya Vachseengga