பாடல் #43189
ஒரு நாள் இயேசு திரும்பவும்
🔤 Oru Naal Yesu Thirumbavum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நாள் இயேசு திரும்பவும் வருவார் சீக்கிரம் திருந்திடப்பா பல நாள் திருடனும் பதுங்க முடியாது பாத்து நடந்துக்கப்பா காலம் கடந்து போய்க்கொண்டேதான் இருக்கும் கடைசி நேரத்துல கைகொட்டிதான் சிரிக்கும் ஆனாலும் என் தேவன் வருகிற நேரத்துல ஓடி ஒளிஞ்சாலும் உலகத்தின் ஓரத்துல முடிஞ்சது முடிஞ்சது டோய்.. உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டன்னு முன்னால போனாலும் இடிக்கிற நீ பின்னால வந்தாலும் கடிக்கிற நீ பொன்னால பெண்ணால மண்ணாலதான் கெட்ட என்னத்த சொன்னாலும் கண்ணத்தான் மூடிட்ட களியாட்ட விளையாட்டா செஞ்சதெல்லாம் தப்புதான் இதுலேட்டா புரிஞ்சாலும் இனியும் ஒரு வாய்ப்புதான் திருந்திடு திருந்திடு இனியாச்சும் திருந்திடு வருந்திடு வருந்திடு இப்பவாச்சும் வருந்திடு டோய்.. நல்லத செஞ்சாலும் கெட்டத செஞ்சாலும் இயேசப்பா முன்னால நிக்கனும் நீ உன் தப்ப அந்நாளில் கக்கனும் நீ ஏன் இந்த வம்பு இயேசுவ நீ நம்பு இரட்சிப்புக் கேற்றபடி இப்பவே நீ திரும்பு கர்த்தருக்குப் பயந்துட்டா காலமெல்லாம் ஜாலிதான் கண்மூடி படுத்துகிட்டா கண்டதெல்லாம் இருட்டுதான் மறந்திடு மறந்திடு பழசெல்லாம் மறந்திடு திறந்திடு திறந்திடு மனசெல்லாம் திறந்திடு டோய்.. ஒருநோக்கம் இல்லாம உருவாக்கல உன்ன ஒன்னோட இஷ்டத்தில நீ பொறக்கல ஒரு நாளும் நீ உனக்கு சொந்தமில்ல மண்ணோடுக்கொத்த நீ மண்ணோட போறதுக்கா மன்னாதி மன்னரு மனுஷரா வந்தாரு இயேசப்பா முன்னால எல்லாமே மண்ணுதான் இப்பகூட ஏத்துகிட்டா நீயும் அவர் கண்ணுதான் எழுந்திடு எழுந்திடு கண் விழிச்சு எழுந்திடு உணர்ந்திடு உணர்ந்திடு உண்மையத்தான் உணர்ந்திடு டோய்..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Naal Yesu Thirumbavum Varuvaar Seekkiram Thirunthidappaa Pala Naal Thirudanum Pathungga Mutiyaathu Paatthu Natanthukkappaa Kaalam Katanthu Poykkontaethaan Irukkum Kataisi Naeratthula Kaikottithaan Sirikkum Aanaalum En Devan Varukira Naeratthula Oti Olinjsaalum Ulakatthin Oratthula Mutinjjathu Mutinjjathu Toy.. Unnaala Naan Kettaen Ennaala Nee Kettannu Munnaala Ponaalum Itikkira Nee Pinnaala Vanthaalum Katikkira Nee Ponnaala Pennaala Mannaalathaan Ketta Ennattha Sonnaalum Kannatthaan Mootitta Kaliyaatta Vilaiyaattaa Senjjathellaam Thapputhaan Ithulaettaa Purinjsaalum Iniyum Oru Vaaypputhaan Thirunthitu Thirunthitu Iniyaachsum Thirunthitu Varunthitu Varunthitu Ippavaachsum Varunthitu Toy.. Nallatha Senjsaalum Kettatha Senjsaalum Yesappaa Munnaala Nikkanum Nee Un Thappa Annaalil Kakkanum Nee Aen Indha Vampu Yesuva Nee Nampu Iratsippuk Kaertrapati Ippavae Nee Thirumpu Karttharukkup Payanthuttaa Kaalamellaam Jaalithaan Kanmooti Patutthukittaa Kandathellaam Iruttuthaan Maranthitu Maranthitu Pazhasellaam Maranthitu Thiranthitu Thiranthitu Manasellaam Thiranthitu Toy.. Orunokkam Illaama Uruvaakkala Unna Onnoda Ishtatthila Nee Porakkala Oru Naalum Nee Unakku Sondhamilla Mannotukkottha Nee Mannoda Porathukkaa Mannaathi Mannaru Manusharaa Vanthaaru Yesappaa Munnaala Ellaamae Mannuthaan Ippakooda Aetthukittaa Neeyum Avar Kannuthaan Ezhunthitu Ezhunthitu Kan Vizhichsu Ezhunthitu Unarnthitu Unarnthitu Unmaiyatthaan Unarnthitu Toy..