பாடல் #43187
பணத்துக்கு குறச்சலில்ல
🔤 Panatthukku Kuracchalilla
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பணத்துக்கு குறச்சலில்ல படைபலத்துக்கும் கவல இல்ல கூப்பிட்டா ஓடிவர கூட்டத்துக்கொன்னும் குறைவு இல்ல ஆனாலும் ஏதோ ஒண்ணு எனக்கு கொறயுது அது என்னனு தேடிக்கிட்டு உள்ளம் ஏங்குது ஓடோடி உழச்சிப்பார்த்து ஓவரா பணத்த சேர்த்து கோடானு கோடிய கொட்டி குறைகளை தீர்த்துப் பார்த்தும் நாடோடி போலத்தானே மனசு தவிக்குது எல்லாமே இருந்தும் ஏதோ இல்லாதிருக்குது பேர்புகழ் பெற்றிருக்கேன் பெரிய மெடலும் வாங்கிருக்கேன் ஊர்முழுசும் நல்லா உலா வந்து உசந்திருக்கேன் தாராள மனசுக்காரன்னு ஊரு புகழுது-ஆனா ஏராளமா எனக்கு ஏக்கம் இருக்குது கண் முழிச்சாலும் குருட்டு லைட்ட போட்டும் இருட்டு பட்டப்பகலும் எனக்கு பார்க்கப் பயமா இருக்கு நைட்டு லைப்ப போல வாழ்க்கை இருக்குது-நான் கொயிட்டா உக்காந்தாலும் வேர்த்து விறுக்குது சேராத இடமுமில்ல சிந்திக்காத நினப்புமில்ல மாறாத மார்க்கமில்ல மறுபடி தெளிவும் இல்ல தேடாத கடவுள் இல்ல ஓடா ஒடிஞ்சிட்டேன் ஏடாகூடமா நான் எங்கேயோ சிக்கிட்டேன் எனக்குன்னு யாரு இருக்கா இதுக்கொரு முடிவு இருக்கா எதையோ இழந்த எனக்கு எங்கன்னா நிம்மதி இருக்கா இதயம் படபடன்னு ஏதோ சொல்லுது-எனக்கு இரட்சிப்பு தேவையின்னு எடுத்து சொல்லுது இதுதான் அந்த குறையா இதுவரைக்கும் நானே என்ன கெடுத்திட்டேன்-இப்ப இயேசுகிட்ட வந்து என்ன கொடுத்துவிட்டேன் இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது இன்று இயேசப்பா வந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது இன்று ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா-2 சந்தோஷமா பாடு அல்லேலுயா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Panatthukku Kuracchalilla Pataibalatthukkum Kavala Illa Kooppittaa Otivara Koottatthukkonnum Kuraivu Illa Aanaalum Aetho Onnu Enakku Korayuthu Athu Ennanu Thaetikkittu Ullam Aengkuthu Ototi Uzhachsippaartthu Ovaraa Panattha Saertthu Kotaanu Kotiya Kotti Kuraigalai Theertthup Paartthum Naatoti Polatthaanae Manasu Thavikkuthu Ellaamae Irunthum Aetho Illaathirukkuthu Paerpugazh Perrirukkaen Periya Medalum Vaangkirukkaen Oormuzhusum Nallaa Ulaa Vanthu Usanthirukkaen Thaaraala Manasukkaarannu Ooru Pugazhuthu-aanaa Aeraalamaa Enakku Aekkam Irukkuthu Kan Muzhichsaalum Kuruttu Laitta Pottum Iruttu Pattappakalum Enakku Paarkkap Payamaa Irukku Naittu Laippa Pola Vaazhkkai Irukkuthu-naan Koyittaa Ukkaanthaalum Vaertthu Virukkuthu Saeraadha Idamumilla Sinthikkaadha Ninappumilla Maaraadha Maarkkamilla Marubati Thelivum Illa Thaetaadha Katavul Illa Otaa Otinjsittaen Aetaakoodamaa Naan Engkaeyo Sikkittaen Enakkunnu Yaaru Irukkaa Ithukkoru Mutivu Irukkaa Ethaiyo Izhandha Enakku Enggannaa Nimmathi Irukkaa Idhayam Patapatannu Aetho Solluthu-enakku Iratsippu Thaevaiyinnu Etutthu Solluthu Ithuthaan Andha Kuraiyaa Ithuvaraikkum Naanae Enna Ketutthittaen-ippa Yesukitta Vanthu Enna Kotutthuvittaen Inraikku Indha Veettukku Iratsippu Vandhathu Inru Yesappaa Vandha Veettukku Iratsippu Vandhathu Inru Osannaa Osannaa Allaeluyaa-2 Santhoshamaa Paatu Allaeluyaa-2