பாடல் #43186
பொன்னோ மணியோ தேவையில்லை
🔤 Ponno Maniyo Thaevaiyillai
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொன்னோ மணியோ தேவையில்லை இயேசு இருப்பதினால் கவலையில்லை இது வெறும் வார்த்தையில்லை வெட்டிப்பேச்சு இல்லை ருசித்துப்பார்த்தவர்க்குப் புரியும் இது இயேசுவை ரசித்துப் பார்த்தவர்க்குத் தெரியும் இது-2 ஆரம்பம் அற்பமானாலும் முடிவு (சம்பூர்ணமாகும்)-2 காலங்கள் கடந்து போனாலும் காத்திருந்தால் (புது பெலனுமாகும்)-2 நாளை தினம் குறித்து கவலையில்லை நடுத்தெருவில் நிற்கத் தேவையில்லை-2 இது ஆசை வார்த்தையில்லை ஆள் சேர்க்கவில்லை அனுபவித்தவரின் சாட்சி இது இயேசுவை அறிந்து கொண்டவரின் பேச்சு இது-2 பலவீனம் அது வந்த போதும் தேவ கிருபை பெலன் அது (நமக்கு போதும்;)-2 எதிராளி நம்மைச் சூழ்ந்த போதும் அவர் நமக்காக செய்யும் (யுத்தம் போதும்)-2 எந்த சூழ்நிலைக்கும் கலக்கமில்லை இதெல்லாம் நினைக்க துளி நேரமில்லை-2 இனி முறு முறுப்பு இல்லை புலம்பல் அறிக்கையில்லை எதுவும் அவர் சுமக்கும் பாரம் இது எதற்கும் துதி செலுத்தும் நேரம் இது விருதாவாய் தன்னைத் தேடவேண்டுமென்று யாருக்கும் (அவர் சொன்னதில்லை)-2 பெரிதான இரட்சிப்புத் தரவேண்டுமென்று எளிதாக நீதி (பேசும் தெய்வம்)-2 அவரே கர்த்தர் வேறொருவர் இல்லை அவரைத்தவிர யாரும் தேவன் இல்லை அவர் வேறு யாரும் இல்லை வெகு தூரம் இல்லை உனக்குள் வாசம் செய்யும் ஆவியானவர் உன்மேல் நேசம் வைத்த இயேசுவானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponno Maniyo Thaevaiyillai Yesu Iruppathinaal Kavalaiyillai Ithu Verum Vaartthaiyillai Vettippaechsu Illai Rusitthuppaartthavarkkup Puriyum Ithu Yesuvai Rasitthup Paartthavarkkuth Theriyum Ithu-2 Aarambam Arpamaanaalum Mutivu (sampoornamaakum)-2 Kaalanggal Katanthu Ponaalum Kaatthirunthaal (puthu Pelanumaakum)-2 Naalai Thinam Kuritthu Kavalaiyillai Natuttheruvil Nirkath Thaevaiyillai-2 Ithu Aasai Vaartthaiyillai Aal Saerkkavillai Anubavitthavarin Saatsi Ithu Yesuvai Arinthu Kondavarin Paechsu Ithu-2 Palaveenam Athu Vandha Pothum Thaeva Kirupai Pelan Athu (namakku Pothum;)-2 Ethiraali Nammaich Soozhndha Pothum Avar Namakkaaga Seyyum (yuttham Pothum)-2 Endha Soozhnilaikkum Kalakkamillai Ithellaam Ninaikka Thuli Naeramillai-2 Ini Muru Muruppu Illai Pulambal Arikkaiyillai Ethuvum Avar Sumakkum Paaram Ithu Edharkum Thuthi Selutthum Naeram Ithu Viruthaavaay Thannaith Thaedavaentumenru Yaarukkum (avar Sonnathillai)-2 Perithaana Iratsipputh Tharavaentumenru Elithaaga Neethi (paesum Theyvam)-2 Avarae Kartthar Vaeroruvar Illai Avaraitthavira Yaarum Devan Illai Avar Vaeru Yaarum Illai Veku Thooram Illai Unakkul Vaasam Seyyum Aaviyaanavar Unmael Naesam Vaittha Yesuvaanavar