பாடல் #43185
ராஜா ராஜா எங்கள் இயேசு ராஜா
🔤 Raajaa Raajaa Enggal Yesu Raajaa
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜா ராஜா எங்கள் இயேசு ராஜா உம்மை அன்போடு அழைக்கிறோம் வாரும் ராஜா ரோஜா ரோஜா சாரோனின் ரோஜா எங்கள் ராஜாதி ராஜாவே வாரும் ராஜா வானாதி வானங்களும் உம்மை கொள்ளக்கூடாதிருக்கும் கர்த்தாதி கர்த்தத்துவம் உங்க தோளின் மேலேயிருக்கும் ஆதியும் அந்தமும் ஆனவரே ஆரம்பம் முடிவு இல்லாதவரே முந்தினவர் பிந்தினவர் நீரே இருந்தவர் இருப்பவர் வருபவரே மாட்சிமையும் வல்லமையும் மகிமை ஜெயமும் மகத்துவமும் ராஜ்யமும் உம்முடையவை தேவன் எல்லாமே ஆளுகிறீர் எல்லோர்க்கும் தலைவராய் உயர்ந்தவரே எல்லாவற்றிற்கும் மேலானவரே எல்லார் மேலும் தயை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே மார்பருகே பொற்கச்சையும் ஏழு பொன் விளக்கின் மத்தியிலும் நிலையங்கி தரித்தவராய் ஏழு நட்சத்திரம் ஏந்தினவராய் தேவ மகிமையின் பிரகாசமே தெய்வீகத்தன்மையின் சொரூபமே ஒருவராய் சாவாமையுள்ளவரே ஒருபோதும் மாறாத மெய்தேவனே தூயாதி தூயவரே தூய ஆவியும் ஆனவரே துதி கனம் மகிமைக்கெல்லாம் என்றும் பாத்திரர் ஆனவரே காணக்கூடாதவராய் இருப்பவரே சேரக்கூடா ஒளியில் வசிப்பவரே சத்துவமும் வல்லமையும் உம் கரத்தில்தான் நித்தியத்துக்கான வழி உம்மிடத்தில்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaa Raajaa Enggal Yesu Raajaa Ummai Anpotu Azhaikkirom Vaarum Raajaa Rojaa Rojaa Saaronin Rojaa Enggal Raajaathi Raajaavae Vaarum Raajaa Vaanaathi Vaananggalum Ummai Kollakkootaathirukkum Kartthaathi Kartthatthuvam Ungga Tholin Maelaeyirukkum Aathiyum Andhamum Aanavarae Aarambam Mutivu Illaadhavarae Munthinavar Pinthinavar Neerae Irundhavar Iruppavar Varubavarae Maatsimaiyum Vallamaiyum Makimai Jeyamum Makatthuvamum Raajyamum Ummutaiyavai Devan Ellaamae Aalukireer Ellorkkum Thalaivaraay Uyarndhavarae Ellaavarrirkum Maelaanavarae Ellaar Maelum Thayai Ullavarae Ellaa Makimaikkum Paatthirarae Maarparukae Porkachsaiyum Aezhu Pon Vilakkin Matthiyilum Nilaiyangki Tharitthavaraay Aezhu Natsatthiram Aenthinavaraay Thaeva Makimaiyin Pirakaasamae Theyveegatthanmaiyin Soroobamae Oruvaraay Saavaamaiyullavarae Orupothum Maaraadha Meydevanae Thooyaathi Thooyavarae Thooya Aaviyum Aanavarae Thuthi Kanam Makimaikkellaam Enrum Paatthirar Aanavarae Kaanakkootaadhavaraay Iruppavarae Saerakkootaa Oliyil Vasippavarae Satthuvamum Vallamaiyum Um Karatthilthaan Nitthiyatthukkaana Vazhi Ummidatthilthaan