பாடல் #43183
ஸ்தோத்திர கீதங்களை எப்போதும்
🔤 Sthotthira Keedhanggalai Eppothum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திர கீதங்களை எப்போதும் பாடிடுவேன் ஓயாமல் உம்மைப்பற்றி உற்சாகமாய் துதிப்பேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா தாயே தனிச்சிறப்பே தயங்காமல் தருபவரே, தந்தையுமாகி என்னை தாலாட்டும் தயாபரரே கவியே கன்மலையே கண்மணிபோல் காப்பவரே கலங்கிடும் இருதயத்தின் ஆறுதலே ஸ்தோத்திரமே நாடி நரம்பெல்லாம் உமைப்பாட ஏங்கி நிற்க தேடி வந்தவரே தெள்ளமுதே ஸ்தோத்திரமே மாறும் உலகினிலே மாறாத நேசரவர் மன்னவர் இயேசுவுக்கு மறுபடியும் ஸ்தோத்திரமே மலரே மாமழையே மனதோடு இருப்பவரே மறைபொருள் அறிந்தவரே மறுரூபமானவரே உயிரே உயிர்த்தவரே உறங்காமல் காப்பவரே உள்ளம் முழுவதிலும் உறைபவரே ஸ்தோத்திரமே வாழும் வையகமே வளமான நீர் நதியே வாழ்க்கையை தந்துவிட்ட வள்ளலுக்கு ஸ்தோத்திரமே ஏழை குரல் கேட்டு எளியோர்க்கு மனம் இரங்கும் இயேசு அப்பாவிற்கு எப்பொழுதும் ஸ்தோத்திரமே. ஒளியே, ஒரு நினைவே ஒன்றான மெய்ப்பொருளே குணமே குளிர்நிழலே குறையாமல் கொடுப்பவரே மூச்சே முழுப்பயனே முடிவில்லா ஒரு தயவே பேச்சே பெரும்சுகமே பெரியவரே ஸ்தோத்திரமே. ஆளும் ஐம்புலனே அன்போடு அணைப்பவரே அளவே இல்லாத அதிசயமே ஸ்தோத்திரமே. ஒருவரும் சேராத ஒளியினிலே வாசம் செய்யும் உன்னத தேவனுக்கே ஓயாமல் ஸ்தோத்திரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthira Keedhanggalai Eppothum Paatituvaen Oyaamal Ummaipparri Ursaagamaay Thuthippaen Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Thaayae Thanichsirappae Thayangkaamal Tharubavarae, Thanthaiyumaaki Ennai Thaalaattum Thayaabararae Kaviyae Kanmalaiyae Kanmanipol Kaappavarae Kalangkitum Irudhayatthin Aarudhalae Sthotthiramae Naati Narampellaam Umaippaada Aengki Nirka Thaeti Vandhavarae Thellamuthae Sthotthiramae Maarum Ulakinilae Maaraadha Naesaravar Mannavar Yesuvukku Marubatiyum Sthotthiramae Malarae Maamazhaiyae Manathotu Iruppavarae Maraiporul Arindhavarae Maruroobamaanavarae Uyirae Uyirtthavarae Urangkaamal Kaappavarae Ullam Muzhuvathilum Uraibavarae Sthotthiramae Vaazhum Vaiyakamae Valamaana Neer Nathiyae Vaazhkkaiyai Thanthuvitta Vallalukku Sthotthiramae Aezhai Kural Kaettu Eliyorkku Manam Irangkum Yesu Appaavirku Eppozhuthum Sthotthiramae. Oliyae, Oru Ninaivae Onraana Meypporulae Kunamae Kulirnizhalae Kuraiyaamal Kotuppavarae Moochsae Muzhuppayanae Mutivillaa Oru Thayavae Paechsae Perumsugamae Periyavarae Sthotthiramae. Aalum Aimpulanae Anpotu Anaippavarae Alavae Illaadha Athisayamae Sthotthiramae. Oruvarum Saeraadha Oliyinilae Vaasam Seyyum Unnatha Devanukkae Oyaamal Sthotthiramae