பாடல் #43176
உம்மவிட்டா எனக்கு இங்க யார்
🔤 Ummavittaa Enakku Ingga Yaar
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மவிட்டா எனக்கு இங்க யார் இருக்காங்க-இயேசப்பா-2 இங்க உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா உலகம் தோன்றும் முன்னே என்னை தெரிந்து கொண்டவர் நீர் என் உள்ளிந்திரியம் சோதித்து அறிந்து கொண்டவர் நீர்-2 உம்மை நம்புகிற யாவரையும் புரிந்து கொண்டவர் நீரே-2 எல்லா துரைத்தன அதிகாரங்களை உரிந்து கொண்டவர் நீரே-2 இந்த உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா பாவி என்று தள்ளிவிடாமல் பாதுகாக்கும் தேவன் என்னைப் பலப்படுத்தி வலக்கரத்தால் தாங்கிநடத்தும் ராஜன்; பயப்படாதே என்று சொல்லி ஸ்திரப்படுத்தின தேவன் கேடகமாய் பெரும் பெலனாய் என்னைச் சூழ்ந்த ராஜன் இந்த உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா என்னை ஜெநிப்பித்த கண்மலை என்னைப் பெற்ற தெய்வம் நீரே கழுகைப் போல செட்டைகளின் மேல் சுமந்து சென்றவர் நீரே உயர் ஸ்தானங்களில் ஏறிவரப் பண்ணின தேவன் நீரே உம்மை உயர்த்திடவும் துதித்திடவும் விருப்பம் வைத்தவர் நீரே இந்த உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வானத்திலும் பூமியிலும் நீர் ஒருவரே பரிசுத்தர் யார் உமக்கு பயப்படாமல் போகக்கூடும் ஐயா எல்லா ஜாதிகளும் உமக்கு முன்பாய்த் தொழுதுகொள்வார் மெய்யாய் இந்த உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummavittaa Enakku Ingga Yaar Irukkaangga-yesappaa-2 Ingga Unmaiyum Nanmaiyum Sollik Kotukka Yaar Irukkaangga-yesappaa Ulakam Thonrum Munnae Ennai Therinthu Kondavar Neer En Ullinthiriyam Sothitthu Arinthu Kondavar Neer-2 Ummai Nampukira Yaavaraiyum Purinthu Kondavar Neerae-2 Ellaa Thuraitthana Athikaaranggalai Urinthu Kondavar Neerae-2 Indha Unmaiyum Nanmaiyum Sollik Kotukka Yaar Irukkaangga-yesappaa Paavi Enru Thallivitaamal Paathukaakkum Devan Ennaip Palappatutthi Valakkaratthaal Thaangkinatatthum Raajan; Payappataathae Enru Solli Sthirappatutthina Devan Kaedakamaay Perum Pelanaay Ennaich Soozhndha Raajan Indha Unmaiyum Nanmaiyum Sollik Kotukka Yaar Irukkaangga-yesappaa Ennai Jenippittha Kanmalai Ennaip Pertra Theyvam Neerae Kazhukaip Pola Settaigalin Mael Sumanthu Sendravar Neerae Uyar Sthaananggalil Aerivarap Pannina Devan Neerae Ummai Uyartthidavum Thuthitthidavum Viruppam Vaitthavar Neerae Indha Unmaiyum Nanmaiyum Sollik Kotukka Yaar Irukkaangga-yesappaa Sarva Vallamaiyulla Devanaakiya Kartthar Vaanatthilum Poomiyilum Neer Oruvarae Parisutthar Yaar Umakku Payappataamal Pogakkootum Aiyaa Ellaa Jaathigalum Umakku Munpaayth Thozhuthukolvaar Meyyaay Indha Unmaiyum Nanmaiyum Sollik Kotukka Yaar Irukkaangga-yesappaa