பாடல் #43172
உங்க இரக்கமும் உங்க கிருபையும்
🔤 Ungga Irakkamum Ungga Kirupaiyum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க இரக்கமும் உங்க கிருபையும் என்னை தாங்கி நடத்துதே உங்க தன்நிகரில்லா தயவுக்காக ஏங்;கி கிடக்குதே என் இதயம் ஏங்கி கிடக்குதே முந்நூறு தரம் என்ன மூவாயிரம் தரம் என்ன முடிவில்லா உம் கிருபைக்கு முழு நீள அளவு என்ன முத்திரை மோதிரமாய் என்னையும் வைத்துக்கொண்டீர் முத்துமணி மாணிக்கமாய் உம் வசனம் எனக்கு தந்தீர் அக்கிரமும் பாவமும் என்னைப் பிடித்திருந்த போதிலும் அற்பமாய் எண்ணாமல் என்னை அரவணைத்த தெய்வமே கட்டுகளும் உபத்திரவமும் கலங்கடித்த நேரத்தில் விட்டுவிட மனதில்லாமல் விரும்பி வந்த இயேசுவே இந்த உலகினில் எந்த உறவிலும் இந்த பரிவு இல்லையே இதைப்புரிந்திட எனக்கிதுவரை எந்த அறிவும் இல்லையே எனக்கெந்த அறிவும் இல்லையே உம்மாலே உயிர்க்கப்பட்டேன் உமதன்பிலே ஈர்க்கப்பட்டேன் உண்மையைப் புரிந்து கொள்ள உள்ளம் முழுவதும் நொறுக்கப்பட்டேன் இத்தனை முயற்சிகளை எனக்கென்று நீர் செய்ய எத்தனை பாக்கியமோ கணக்கில்லை துதி செய்ய-2 ஒட்டுத்துணி இல்லாமலே உலகில் வந்த என்னையும் இரட்சிப்பென்னும் வஸ்திரத்தால் மூடிக்கொண்ட தெய்வமே அங்குமிங்கும் அலைந்து திரிந்து ஐயோவென்ற நேரத்தில் ஆதரவுக் கரங்கள் நீட்டி அரவணைத்த இயேசுவே என்னைக் கருவரை முதல் இதுவரையிலும் ஏந்தி வந்தவர் உண்மை புரிந்திட உம்மை ருசித்திட ஒரு வாய்ப்பு தந்தவர் உலகின் ஒளியுமானவர் விந்தை கிறிஸ்தேசு எந்தன் சிந்தையிலே வந்து விட்டீர் நிந்தைகளை நீக்கி உந்தன் மந்தையிலே சேர்த்துவிட்டீர் என்னிலும் பலத்தவராய் என்னை மேற்கொண்டவரே என்னையும் இணங்கப்பண்ணி என் மனதை ஜெயித்தவரே-2 நீர் பெரியவர் எனக்குரியவர் என் ஜீவனானவர் இது என்றென்றைக்கும் நான் தங்கியிருக்கும் இடமும் என்றவர் இதயத்தை திரும்ப வென்றவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Irakkamum Ungga Kirupaiyum Ennai Thaangki Natatthuthae Ungga Thannigarillaa Thayavukkaaga Aeng;ki Kidakkuthae En Idhayam Aengki Kidakkuthae Munnooru Tharam Enna Moovaayiram Tharam Enna Mutivillaa Um Kirupaikku Muzhu Neela Alavu Enna Mutthirai Mothiramaay Ennaiyum Vaitthukkonteer Mutthumani Maanikkamaay Um Vasanam Enakku Thantheer Akkiramum Paavamum Ennaip Pititthirundha Pothilum Arpamaay Ennaamal Ennai Aravanaittha Theyvamae Kattugalum Ubatthiravamum Kalanggatittha Naeratthil Vittuvida Manathillaamal Virumpi Vandha Yesuvae Indha Ulakinil Endha Uravilum Indha Parivu Illaiyae Ithaippurinthida Enakkithuvarai Endha Arivum Illaiyae Enakkendha Arivum Illaiyae Ummaalae Uyirkkappattaen Umathanpilae Eerkkappattaen Unmaiyaip Purinthu Kolla Ullam Muzhuvathum Norukkappattaen Itthanai Muyarsigalai Enakkenru Neer Seyya Etthanai Paakkiyamo Kanakkillai Thuthi Seyya-2 Ottutthuni Illaamalae Ulakil Vandha Ennaiyum Iratsippennum Vasthiratthaal Mootikkonda Theyvamae Angkumingkum Alainthu Thirinthu Aiyovendra Naeratthil Aadharavuk Karanggal Neetti Aravanaittha Yesuvae Ennaik Karuvarai Mudhal Ithuvaraiyilum Aenthi Vandhavar Unmai Purinthida Ummai Rusitthida Oru Vaayppu Thandhavar Ulakin Oliyumaanavar Vinthai Kiristhaesu Endhan Sinthaiyilae Vanthu Vitteer Ninthaigalai Neekki Undhan Manthaiyilae Saertthuvitteer Ennilum Palatthavaraay Ennai Maerkondavarae Ennaiyum Inanggappanni En Manathai Jeyitthavarae-2 Neer Periyavar Enakkuriyavar En Jeevanaanavar Ithu Enrenraikkum Naan Thangkiyirukkum Idamum Endravar Idhayatthai Thirumba Vendravar