பாடல் #43171
உருகுது உருகுது உள்ளமெல்லாம்
🔤 Urukuthu Urukuthu Ullamellaam
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உருகுது உருகுது உள்ளமெல்லாம் உம் அன்பை நினைக்கையிலே பெருகுது பெருகுது வெள்ளமென உம் கிருபை எனக்குள்ளே-2 எனக்காய் சிலுவை சுமந்தீர் அன்று அதனால்தானே பிழைத்தேன் இன்று-2 உவ்வொரு நாளும் உமக்குள்ளே நான் நிலைத்திட வேண்டிடுவேன் கண்மணிபோல் எனை காத்திடும் தேவனின் கரமதை விட மாட்டேன்-2 ஒரு வழியாக உம்மிடம் சேர்ந்தேன் திரும்பவும் போவேனோ உம் சந்நிதி மறப்பேனோ சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் நினைப்பாய் இருப்பவரே உணர்வாய் உயிராய் உள்ளம் முழுதும் வலம் வரும் ஆண்டவரே-2 தேவரீர் எந்தன் துணையாய் இருந்து விடுதலை தந்தீரே-என்னை உமக்கென தெரிந்தீரே மடங்கிய என்னைத் தாங்கிய தேவனில் அடங்கிட வேண்டிடுவேன் விழுகிற என்னைத் தூக்கிடும் தேவனைத் தொழுதிட நாடிடுவேன்-2 அழுகிற போது அரவணைத்தீரே ஆறுதல் தந்தீரே-ஐயா அடைக்கலம் கொடுத்தீரே உலகம் உண்டாகும் முன்னே என் பெயரை முன் குறித்து வைத்ததென்ன வானமும் பூமியும் படைத்தவராலே ஒத்தாசை வந்ததென்ன-2 இதற்கென்று ஈடாய் உமக்கென்று நானும் இதுவரை தந்ததென்ன இந்த அன்பிற்கு விலையும் என்ன-
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Urukuthu Urukuthu Ullamellaam Um Anpai Ninaikkaiyilae Perukuthu Perukuthu Vellamena Um Kirupai Enakkullae-2 Enakkaay Siluvai Sumantheer Anru Adhanaalthaanae Pizhaitthaen Inru-2 Uvvoru Naalum Umakkullae Naan Nilaitthida Vaentituvaen Kanmanipol Enai Kaatthitum Devanin Karamathai Vida Maattaen-2 Oru Vazhiyaaga Ummidam Saernthaen Thirumbavum Povaeno Um Sannithi Marappaeno Sirumaiyum Elimaiyum Aana Enmael Ninaippaay Iruppavarae Unarvaay Uyiraay Ullam Muzhuthum Valam Varum Aandavarae-2 Thaevareer Endhan Thunaiyaay Irunthu Vitudhalai Thantheerae-ennai Umakkena Therintheerae Matangkiya Ennaith Thaangkiya Devanil Adangkida Vaentituvaen Vizhukira Ennaith Thookkitum Devanaith Thozhuthida Naatituvaen-2 Azhukira Pothu Aravanaittheerae Aarudhal Thantheerae-aiyaa Ataikkalam Kotuttheerae Ulakam Untaakum Munnae En Peyarai Mun Kuritthu Vaitthathenna Vaanamum Poomiyum Pataitthavaraalae Otthaasai Vandhathenna-2 Idharkenru Eetaay Umakkenru Naanum Ithuvarai Thandhathenna Indha Anpirku Vilaiyum Enna-