பாடல் #43159
தேவ சித்தம் செய்ய என்னை
🔤 Thaeva Sittham Seyya Ennai
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ சித்தம் செய்ய என்னை அர்ப்பணிக்கின்றேன் தேவ சத்தம் கேட்க என்னை ஒப்புவிக்கின்றேன்- தேவன் நீர் என்னை நடத்தும் தேவ சித்தம் செயல்படுத்தும்-2 1. தேவனே உம் பாதம் அமர்ந்து உம் சத்தம் நானும் கேட்டிட தேசத்தின் தேவைகள் அறிந்து உம் சமூகத்தில் வந்து நின்றிட-2 தேவன் நீர் 2. துன்பம் தொல்லைகள் என்னில் வந்தாலும் துணிந்து உம் பின்னே வந்திட தோல்வி கஷ்டங்கள் என்னை சூழ்ந்தாலும் துதித்து உம் பின்னே வந்திட-2 தேவன் நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Sittham Seyya Ennai Arppanikkinraen Thaeva Sattham Kaetka Ennai Oppuvikkinraen- Devan Neer Ennai Natatthum Thaeva Sittham Seyalpatutthum-2 1. Devanae Um Paadham Amarnthu Um Sattham Naanum Kaettida Thaesatthin Thaevaigal Arinthu Um Samoogatthil Vanthu Ninrida-2 Devan Neer 2. Thunbam Thollaigal Ennil Vanthaalum Thuninthu Um Pinnae Vanthida Tholvi Kashtanggal Ennai Soozhnthaalum Thuthitthu Um Pinnae Vanthida-2 Devan Neer