பாடல் #43115
நேற்றும் இன்றும் மாறா
🔤 Naerrum Inrum Maaraa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றும் இன்றும் மாறா ஒரு தேவன் எனக்குண்டு நேசக் கரத்தால் தாங்கும் ஒரு நண்பன் நமக்குண்டு - 2 அவர் வானிலும் சிறந்தவர் இந்தப் புவியிலும் பெரியவர் நம் பெலனுமானவர் அவர் சர்வ வல்லவர்! He is the Best, the Best நம் தேவன் Best தான் - 2 அவர் கிருபை Best தான் அவர் வார்த்தை Best தான் அவர் அன்பும் Best தான் எல்லாமே, Best தான்! 1) காலையில் எழுந்தவுடனே அவர் பாதம் தேடுவோம் பாதத்தில் கருத்தாய் ஜெபித்து புது பாடல் பாடுவோம் - 2 அவர் அன்பை நினைக்கையில் எங்கள் உள்ளம் நெகிழுதே நாங்கள் அவரின் சொந்தமே அவர் கரங்களில் தஞ்சமே! 2) பாவம் நிறைந்த உலகை மீட்க பரிசுத்தர் பிறந்தாரே மகிமை எல்லாம் துறந்து தேவ சித்தம் முடித்தாரே - 2 தலை சாய்க்க இடமின்றி நம் பாடுகள் ஏற்றாரே தம்மை முழுவதும் தந்தாரே நமக்காய் சிலுவையில் மரித்தாரே! 3) தேவனின் வார்த்தை காட்டும் ஜீவ பாதை செல்லுவோம் இயேசுவின் தியாக அன்பை சுவிசேஷமாய் செல்லுவோம் - 2 அவர் அன்பிற்கு ஈடில்லை அன்பின் தெய்வம் வேறில்லை நம் பாதைக்கு வெளிச்சமாய் அவர் வார்த்தை இருக்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerrum Inrum Maaraa Oru Devan Enakkuntu Naesak Karatthaal Thaangkum Oru Nanpan Namakkuntu - 2 Avar Vaanilum Sirandhavar Indhap Puviyilum Periyavar Nam Pelanumaanavar Avar Sarva Vallavar! He is the Best, the Best Nam Devan Best Thaan - 2 Avar Kirupai Best Thaan Avar Vaartthai Best Thaan Avar Anpum Best Thaan Ellaamae, Best Thaan! 1) Kaalaiyil Ezhundhavudanae Avar Paadham Thaetuvaeாm Paadhatthil Karutthaay Jepitthu Puthu Paadal Paatuvaeாm - 2 Avar Anpai Ninaikkaiyil Enggal Ullam Nekizhuthae Naanggal Avarin Sondhamae Avar Karanggalil Thanjjamae! 2) Paavam Niraindha Ulakai Meetka Parisutthar Piranthaarae Makimai Ellaam Thuranthu Thaeva Sittham Mutitthaarae - 2 Thalai Saaykka Idaminri Nam Paatugal Aerraarae Thammai Muzhuvathum Thanthaarae Namakkaay Siluvaiyil Maritthaarae! 3) Devanin Vaartthai Kaattum Jeeva Paathai Selluvaeாm Yesuvin Thiyaaga Anpai Suvisaeshamaay Selluvaeாm - 2 Avar Anpirku Eetillai Anpin Theyvam Vaerillai Nam Paathaikku Velicchamaay Avar Vaartthai Irukkumae