பாடல் #43105
என் உயிர் இயேசுவே நீரே
🔤 En Uyir Yesuvae Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிர் இயேசுவே நீரே என்னை நித்தமும் நடத்தினீரே நீதியின் பாதையில் என்னை தினமும் அழைத்து சென்றிரே – 2 என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே - 2 என் வழியும் நீரே என் துணையும் நீரே - என் உயிர் 1. தாய் தந்தை என்னை கைவிட்டாலும் உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் - 2 உயிரின் உயிர் என்று சொன்னவர்கள் உதறி என்னை தள்ளினாலும் - 2 உம கரம் என்னை தாங்கினதே - 2 என் தாயும் நீரே, என் தந்தை நீரே - 2 என் ஆதரவே, என் உயிரும் நீரே - என் உயிர் இயேசுவே நீரே 2. வியாதி படுக்கையில் நான் கிடந்தாலும் பெலனற்று, உடல் சோர்ந்திருந்தாலும் - 2 உலகம் என்னை கைவிட்டாலும் முடிந்ததென்று நாள் குரித்தாலும் - 2 நானே உன் பரிகாரி, என்றுரைத்தீரே - 2 என் சுகமும் நீரே, என் பெலமும் நீரே - 2 என் ஆரோக்கியமே, என் ஔஷதமே - என் உயிர் இயேசுவே நீரே 3. பார்வையிழந்து போன போதும் கால்கள் இழந்து தவித்த போதும் - 2 செவிகள் இரண்டும் அடைந்தபோதும் வாய்கள் ஊமையானபோதும் - 2 ஆவியானவர் நடத்தினீரே - 2 என் கண்கள் நீரே, என் கால்கள் நீரே - 2 என் செவியும் நீரே, என் சொல்லும் நீரே - என் உயிர் இயேசுவே நீரே 4. ஏழையாக பிறந்தபோதும் எளிமையாக வளர்ந்தபோதும் - 2 ஒன்றுமில்லாமல் ஒடுக்கப்பட்டும் பொருட்டில்லாமல் மிதிக்கப்பட்டும் - 2 உம் கரம் என்னை உயர்த்தினதே - 2 என் செல்வம் நீரே, என் சொத்தும் நீரே - 2 எதிர்காலம் நீரே, எனக்கெல்லாம் நீரே - என் உயிர் இயேசுவே நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyir Yesuvae Neerae Ennai Nitthamum Natatthineerae Neethiyin Paathaiyil Ennai Thinamum Azhaitthu Senrirae – 2 En Ulakam Neerae, En Vaazhvum Neerae - 2 En Vazhiyum Neerae En Thunaiyum Neerae - En Uyir 1. Thaay Thanthai Ennai Kaivittaalum Urraar Uravinar Verutthittaalum - 2 Uyirin Uyir Enru Sonnavarkal Udhari Ennai Thallinaalum - 2 Uma Karam Ennai Thaangkinathae - 2 En Thaayum Neerae, En Thanthai Neerae - 2 En Aadharavae, En Uyirum Neerae - En Uyir Yesuvae Neerae 2. Viyaathi Patukkaiyil Naan Kidanthaalum Pelanarru, Udal Sornthirunthaalum - 2 Ulakam Ennai Kaivittaalum Mutindhathenru Naal Kuritthaalum - 2 Naanae Un Parikaari, Enruraittheerae - 2 En Sugamum Neerae, En Pelamum Neerae - 2 En Aarokkiyamae, En Aushathamae - En Uyir Yesuvae Neerae 3. Paarvaiyizhanthu Pona Pothum Kaalkal Izhanthu Thavittha Pothum - 2 Sevigal Irantum Ataindhapothum Vaaykal Oomaiyaanapothum - 2 Aaviyaanavar Natatthineerae - 2 En Kankal Neerae, En Kaalkal Neerae - 2 En Seviyum Neerae, En Sollum Neerae - En Uyir Yesuvae Neerae 4. Aezhaiyaaga Pirandhapothum Elimaiyaaga Valarndhapothum - 2 Onrumillaamal Otukkappattum Poruttillaamal Mithikkappattum - 2 Um Karam Ennai Uyartthinathae - 2 En Selvam Neerae, En Sotthum Neerae - 2 Ethirkaalam Neerae, Enakkellaam Neerae - En Uyir Yesuvae Neerae