பாடல் #43075
நிச்சய கிருபைகள்
🎙 கிறிஸ்தவ பாடல்
நிச்சய கிருபைகள் தருவேன் என்று நித்திய உடன்படிக்கை செய்தவரே - 2 தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே அரியாசனத்தின் மேல் அமர்த்தினீரே - 2 உங்க கிருபை தான் என்னை தாங்கினதே உங்க கிருபை தான் என்னை நடத்தினதே - 4 துன்மார்க்கருக்கு தூரமான கர்த்தர் நீர் நீதிமானுக்கு சமீபமான தேவன் நீர் - 2 கூப்பிட்டதும் குரல் கேட்டு ஓடி வந்தீரே குப்பையிலிருந்து என்னை தூக்கிவிட்டிரே - 2 உம்மாலே நான் ஒரு சேனைக்குள்ளே பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் - 2 அழைத்தவர் என்னோடு இருக்கும் போது அழிக்கவும் அசைக்கவும் முடியாது - என்னை - 2