பாடல் #43074
தூளில் இருந்து உயர்த்தினீர்
🎙 கிறிஸ்தவ பாடல்
தூளில் இருந்து உயர்த்தினீர் தூக்கி என்னை நிறுத்தினீர் துதித்து பாட வைத்தீர் அல்லேலூயா -2 1. காலைதோறும் தவறாமல் கிருபை கிடைக்க செய்கின்றீர் நாள்முழுதும் மறவாமல் நன்மை தொடர செய்கின்றீர் - 2 தடைகளை தகர்ப்பவரே உம் தயவை காண செய்தீரே - 2 2. நிந்தை சொற்கள் நீக்கிட உம் இரக்கத்தை விளங்க செய்தீர் நிந்தித்தோரின் கண்கள் முன்னே நினைத்தீரா அற்புதம் செய்தீர் - 2 நித்தியரே நிரந்தரமே நீதியால் நிறைந்தவரே - 2