பாடல் #43067
அடைக்கலம் நீரே
🎙 கிறிஸ்தவ பாடல்
அடைக்கலம் நீரே - என் உறைவிடமும் நீரே ஆறுதல் நீரே - என்னை அணைப்பவரும் நீரே 1.மாறிடும் உலகினிலே மாறாத பேரன்பே -2 உம் மகனாக/மகளாக மாறிடவே என் மனதார ஏங்குகிறேன் - 2 உடைத்திடுமே உருவாக்குமே உம்மைப்போல் மாற்றிடுமே -2 2.எங்கே நான் சென்றிடுவேன் யாரை நான் சார்ந்திருப்பேன் - 2 என் சூழ்நிலை அறிந்தவரே நீர் இல்லாமல் யாறெனக்கு -2 தங்கிடுமே ஏந்திடுமே கிருபையாய் நடத்திடுமே -2 ஒரு சிறுபிள்ளையாய் உம்மகளாய் உம்மிடம் ஓடி வந்தேன் என்னைத் தாங்கிடுமே ஏந்திடுமே கிருபையாய் நடத்திடுமே.