பாடல் #43066
அழகினில் சிறந்தவர்
🔤 Azhakinil Sirandhavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகினில் சிறந்தவர்
என் அழகையும் ரசிப்பவர்
நீல வானமாய்
இருளில் வெளிச்சமாய்
என் இதயமாய் இருப்பவர்
1.உம் தலை தாழ்ந்ததும் அழகே
என் தலை நிமிர்ந்ததும் உறவே
உம் அழுகையும் அழகானதே
என் வாழ்க்கையின் மருந்தானதே
அளவிற்கும் அதிகமாய்
முதலில் அன்பு கூர்ந்தீரே
உம் அன்பின் செட்டைக்குள் மறைத்து
தீங்கு அரியா நடத்தினீர்
ஒரு நாளும் பிரியாத உறவாகினீர்
2. எந்தன் வாழ்வின் வானமோ
நிறங்கள் அற்று இருந்ததே
வண்ணம் கொண்டு பூசினீர்
பல வானவில்களாய் மாற்றினீர்
இரவாக இருந்தேன்
நிலவாக வந்தீர்
மொழியாக இருந்தேன்
கவிதையாய் என்னை மாற்றினீர்
உம் உயிராக என்னை வைத்தீர் உறவாக்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakinil Sirandhavar
En Azhakaiyum Rasippavar
Neela Vaanamaay
Irulil Velicchamaay
En Idhayamaay Iruppavar
1.um Thalai Thaazhndhathum Azhakae
En Thalai Nimirndhathum Uravae
Um Azhukaiyum Azhakaanathae
En Vaazhkkaiyin Marunthaanathae
Alavirkum Athigamaay
Mudhalil Anpu Koorntheerae
Um Anpin Settaikkul Maraitthu
Theengku Ariyaa Natatthineer
Oru Naalum Piriyaadha Uravaakineer
2. Endhan Vaazhvin Vaanamo
Niranggal Arru Irundhathae
Vannam Kontu Poosineer
Pala Vaanavilkalaay Maarrineer
Iravaaga Irunthaen
Nilavaaga Vantheer
Mozhiyaaga Irunthaen
Kavithaiyaay Ennai Maarrineer
Um Uyiraaga Ennai Vaittheer Uravaakkineer