பாடல் #43051
மகனே ஓ மகளே
🔤 Makanae O Makalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகனே ஓ! மகளே உன் இதயத்தைத் தாராயோ இப்போ தாராயோ! 1. கெட்டமகனைப்போல துஷ்ட வழிகளிலே மட்டு மிஞ்சி நீ அலைந்தும் உனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டே அரவணைப்பேன் திட்டம் இது நீ ஓடிவா 2 அஞ்சாமனதுடனே பஞ்சமா பாதகங்கள் மிஞ்சவுமே புரிந்தாய் - என் நெஞ்சம் உருகுது பார் பஞ்சகாயங்களிலே தஞ்சம் தருவேன் வாராயோ 3. அங்கரங்கள் துளைக்கச் செங்குருதி சுரக்கத் தொங்கிக் குருசில் மரித்தேன் - உன் பங்கமனைத்தும் போக்கித்தங்க அரண்மனையில் சிங்காசனத்தி லமர்த்த 4. கையிலுனையெடுத்து மெய்யாயரவணைத்துக் கண்ணீர்கள் யாவும் துடைப்பேன் - நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப் பெய்வேன் ஆசீர்வாதங்கள் நையாது காத்திடுவேன் 5. நித்திய ராஜியத்தில் நித்திய ஜீவனோடு நித்திய காலம் வாழலாம் - பரி கத்த உலகமதில் அத்தன் மகிமையதில் நித்தம் சுகித்திடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makanae O! Makalae Un Idhayatthaith Thaaraayo Ippo Thaaraayo! 1. Kettamakanaippola Thushta Vazhigalilae Mattu Minjsi Nee Alainthum Unaik Kattippititthu Mutthamittae Aravanaippaen Thittam Ithu Nee Otivaa 2 Anjsaamanathudanae Panjjamaa Paadhakanggal Minjjavumae Purinthaay - En Nenjjam Urukuthu Paar Panjjakaayanggalilae Thanjjam Tharuvaen Vaaraayo 3. Anggaranggal Thulaikkach Sengkuruthi Surakkath Thongkik Kurusil Maritthaen - Un Panggamanaitthum Pokkitthangga Aranmanaiyil Singkaasanatthi Lamarttha 4. Kaiyilunaiyetutthu Meyyaayaravanaitthuk Kanneerkal Yaavum Thutaippaen - Nee Seyyum Jebanggal Kaettup Peyvaen Aaseervaadhanggal Naiyaathu Kaatthituvaen 5. Nitthiya Raajiyatthil Nitthiya Jeevanotu Nitthiya Kaalam Vaazhalaam - Pari Kattha Ulakamathil Atthan Makimaiyathil Nittham Sukitthidalaam