பாடல் #43044
ஜீவனைப் பெற ஜீவாதிபதியாம்
🔤 Jeevanaip Pera Jeevaathibathiyaam
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனைப் பெற ஜீவாதிபதியாம் இயேசு அழைக்கிறார் எழுந்துவா பாவி- 2 1. பாவத்தின் சம்பளம் மரணம் நீ அறிவாய் -2 பாவத்தைச் செய்தால் நீ பாழ்நரகடைவாய் பாவ வழியில் நீ செல்லாதே வா என்று -2 அன்பாய் அழைக்கிறார் திரும்பி வா நீ இன்று 2. பாவி உனக்காக பரலோகம் விட்டவர் -2 பாரினில் வந்துனக்கா யவதரித்தவர் பாவ மாம்சத்தின் சாயலணிந்தவர் -2 பார்த்துன்னை அழைக்கிறார் வந்திடுவாய் இன்று 3. பாவி உனக்காக பாடுகள் பட்டவர் -2 பாரில் உனக்காக இரத்தம் சிந்தினவர் பாவத்தில் மரித்த உனக்காய் ஜீவன் கொடுத்தவர் - 2 வருந்தியழைக்கிறார் வந்திடுவாய் இன்று 4. பாரக்குருசினில் வேதனையுற்றவர் -2 பாவ மன்னிப்புக்காய் வேண்டுதல் செய்தவர் பாவிகட்காய் மீட்பை ஆயத்தமாக்கினவர் -2 உள்ளம் உருகியே அழைக்கிறார் வா இன்று 5. நியாயாதிபதியாக இயேசு வந்திடுவார் - 2 நியாயம் விசாரிப்பார் பாவிகளை அன்று நியாயம் தீர்த்து நித்திய அழிவாகும் தண்டனையை -2 நீதியாய்ச் செலுத்துவார் பாவிகளுக் கன்று 6.விசுவாசித்தால் நீயும் இரட்சிப்பைப் பெறுவாய் -2 விசுவாசித்து உன்னை ஒப்புக் கொடுப்பாய் விசுவாசித்தால் அவர் மகிமையைக் காண்பாய் -2 என்றென்றும் அவருடன் சுகித்திருந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanaip Pera Jeevaathibathiyaam Yesu Azhaikkiraar Ezhunthuvaa Paavi- 2 1. Paavatthin Sambalam Maranam Nee Arivaay -2 Paavatthaich Seythaal Nee Paazhnarakataivaay Paava Vazhiyil Nee Sellaathae Vaa Enru -2 Anpaay Azhaikkiraar Thirumpi Vaa Nee Inru 2. Paavi Unakkaaga Paralogam Vittavar -2 Paarinil Vanthunakkaa Yavatharitthavar Paava Maamsatthin Saayalanindhavar -2 Paartthunnai Azhaikkiraar Vanthituvaay Inru 3. Paavi Unakkaaga Paatugal Pattavar -2 Paaril Unakkaaga Rattham Sinthinavar Paavatthil Marittha Unakkaay Jeevan Kotutthavar - 2 Varunthiyazhaikkiraar Vanthituvaay Inru 4. Paarakkurusinil Vaedhanaiyurtravar -2 Paava Mannippukkaay Vaentudhal Seythavar Paavigatkaay Meetpai Aayatthamaakkinavar -2 Ullam Urukiyae Azhaikkiraar Vaa Inru 5. Niyaayaathibathiyaaga Yesu Vanthituvaar - 2 Niyaayam Visaarippaar Paavigalai Anru Niyaayam Theertthu Nitthiya Azhivaakum Thandanaiyai -2 Neethiyaaych Selutthuvaar Paavigaluk Kanru 6.visuvaasitthaal Neeyum Iratsippaip Peruvaay -2 Visuvaasitthu Unnai Oppuk Kotuppaay Visuvaasitthaal Avar Makimaiyaik Kaanpaay -2 Enrenrum Avarudan Sukitthirunthituvaay