பாடல் #43041
என் மேலுள்ள உம் சர்வ
🔤 En Maelulla Um Sarva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் மேலுள்ள உம் சர்வ நன்மைகட்காக நான் -2 என்ன செய்வேன் உமக்கென் ஏசுபரா -இப்போ 2. நன்றியால் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே- 2 இன்று வரையுமென்னைக் காத்ததாலே -தேவா 3. பாவத்தினின்று எந்தன் ஆவி உயிர்ப்பிக்க - 2 சாபசிக்ஷை சகித்த தேவசுதா -மகா 4. என்னை அனுதினம் அன்போடு நடத்திடும் - 2 பொன்னேசுவே அனந்தம் ஸ்தோத்திரமே - என்றும் 5. முற்று முடிய என்னைக் காத்து நடத்திட -2 சத்துவ மீந்திடும் நல் நண்பர் நீரே- திரு 6. தாதன் வலப்புறத்தில் நாதன் நீர் ஏழைக்காய் -2 பாதம் வேண்டியே நிற்கும் பாக்கியனே - பொன்னின் 7. குற்றம் குறைகளின்றி கோதில்லா ஜோதியில் - 2 முற்றும் எனை நிறுத்த வல்லவரே - தேவா 8. இந்நிலம் தன்னிலேழை தங்கிடும் நாளெல்லாம் -2 போற்றுவேனே உம் திரு நாமமதை -ஏழை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Maelulla Um Sarva Nanmaigatkaaga Naan -2 Enna Seyvaen Umakken Aesubaraa -ippo 2. Nanriyaal Endhan Ullam Pongki Vazhiyuthae- 2 Inru Varaiyumennaik Kaatthathaalae -thaevaa 3. Paavatthininru Endhan Aavi Uyirppikka - 2 Saabasikshai Sakittha Thaevasuthaa -makaa 4. Ennai Anuthinam Anpotu Natatthitum - 2 Ponnaesuvae Anandham Sthotthiramae - Enrum 5. Murru Mutiya Ennaik Kaatthu Natatthida -2 Satthuva Meenthitum Nal Nanpar Neerae- Thiru 6. Thaadhan Valappuratthil Naadhan Neer Aezhaikkaay -2 Paadham Vaentiyae Nirkum Paakkiyanae - Ponnin 7. Kurtram Kuraigalinri Kothillaa Jothiyil - 2 Murrum Enai Niruttha Vallavarae - Thaevaa 8. Innilam Thannilaezhai Thangkitum Naalellaam -2 Porruvaenae Um Thiru Naamamathai -aezhai