பாடல் #43040
பாடிடுவேன் பரிசுத்தரே
🎙 கிறிஸ்தவ பாடல்
பாடிடுவேன் பரிசுத்தரே உம்மில் மகிழ்ந்திடுவேன் தேவா - 2 1. துரோகியாம் என்னை நீர் நேசித்தீர் தேவா - 2 ஆகையினால் அடியேன் உமக்கு துதிகள் சாற்றிடுவேன் - 2 2. சத்துரு என்னை மிக சூழ்ந்து வந்தாலும் - 2 தேவரீர் என்னை சூழ இருந்து பாதுகாக்கிறீர் - 2 3.முடிவு வரையும் நீர் காக்க வல்லவர் -2 முடிவு பரியந்தம் நிலைநிறுத்தி பாதுகாக்கிறவர் -2 4. துன்பம் அணுகாமல் நீர் துணைவராய் இருந்து -2 உம் கரத்தால் தாங்கி என்னை அரவணைக்கிறீர் - 2 5.உம்சித்தம் செய்ய நீர் என்னை அழைத்தீரே -2 உம்சித்தம் செய்து ஜீவித்து நான் உம்மையே துதிப்பேன் -2 6. சோதனை என்னை மிக சூழ்ந்து வருகையில்- 2 சோர்ந்திடாமல் தேற்றி என்னை அரவணைக்கிறீர் -2 7.முடிவு பரியந்தம் இவ்வுலகத்திலும்மை - 2 மகிமைப்படுத்தி வாழ்ந்திடவே அருள் புரிந்திடுவீர் -2