பாடல் #43012
வாலிபரே வாலிபரே
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
வாலிபரே வாலிபரே வாருங்களேன் வாருங்களேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம் பொல்லாங்கனை ஜெயித்திடுவோம் (2) வாலிபரே வாலிபரே வாருங்களேன் வாருங்களேன் (2) 1. முழங்கால்களை நாம் முடக்கிடுவோம் முடங்கினோர்களையே எழுப்பிடுவோம் - 2 இயேசுவின் அன்பினைக் கூறிடுவோம் இயேசுவுக்காய் வாழச் செய்திடுவோம் (2) - வாலிபரே 2. தேசத்திற்காய் நாம் ஜெபித்திடுவோம் சேனைகளாய் நாம் எழும்பிடுவோம் - 2 இயேசுவை இன்றே அறிவிப்போம் இயேசுவின் சீஷராய் உழைத்திடுவோம் (2) -வாலிபரே 3. அழிந்து போகின்ற ஜனங்களையே அழிவிலிருந்து மீட்டிடுவோம் - 2 பரலோகத்தை நம் இந்தியர்கள் அனைவரும் நிரப்பிட உழைத்திடுவோம் - 2 -வாலிபரே